Motorola Edge 30 Pro 60MP கேமராவுடன் இந்த மாதம் அறிமுகமாகும்

HIGHLIGHTS

மோட்டோரோலா ஒரு சக்திவாய்ந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த முடியும்

மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ அறிமுகப்படுத்தப்படலாம்

நிறுவனம் விரைவில் அறிவிக்கலாம்

Motorola Edge 30 Pro 60MP  கேமராவுடன் இந்த மாதம் அறிமுகமாகும்

Moto Edge X30 இந்தியாவில் பிப்ரவரியில் Motorola Edge 30 Pro ஆக அறிமுகப்படுத்தப்படலாம். Qualcomm Snapdragon 8 Gen 1 செயலியை இந்த போனில் கொடுக்கலாம். இந்த போனின் சரியான வெளியீட்டு தேதி தெளிவாக இல்லை. கடந்த மாதம், டிசம்பர் 2021 இல் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Moto Edge X30 ஆனது இந்திய தரநிலைகளின் பணியகத்தின் தரவுத்தளத்தில் காணப்பட்டது. இது விரைவில் நாட்டில் அறிமுகப்படுத்தப்படலாம் என்பதை இது குறிக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

 மோட்டோரோலா ஸ்மாரட்போன் 
 
அதில் மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட எட்ஜ் எக்ஸ் 30 ஸ்மார்ட்போனின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடலாக இருக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இது உண்மையாகும் பட்சத்தில் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும். 

இதன் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் மோட்டோ எட்ஜ் எக்ஸ் 30 மாடலை விட சற்று வித்தியாசமாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அம்சங்களை பொருத்தவரை  மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் பி.ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஹெச்.டி.ஆர். 10 பிளஸ் வசதி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், அதிகபட்சமாக 12 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என தெரிகிறது.

புகைப்படங்களை எடுக்க 50 எம்.பி. பிரைமரி கேமரா, 50 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் சென்சார், 2 எம்.பி. டெப்த் சென்சார், 60 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ மாடலில்  5000எம்.ஏ.ஹெச்.  பேட்டரி, 68 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

புதிய மோட்டோ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் டிசைன் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile