கம்மி விலையில் தட்டி தூக்க சரியானநேரம் 7000mAh பேட்டரி கொண்ட Motorola இந்த மாடலில் அதிரடியாக ரூ,5000 டிஸ்கவுண்ட்

Updated on 30-Jan-2026
HIGHLIGHTS

Motorola போன் பிரியராக இருந்தால் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் Moto G57 Power குறைந்த விலையில் வாங்கலாம்

இந்த மாடலில் 7,000mAh பேட்டரியை வழங்கியுள்ளது

இந்த போனின் MRP விலை ரூ,17,999 ஆனால் பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,12,999க்கு வாங்கலாம்

நீங்கள் ஒரு Motorola போன் பிரியராக இருந்தால் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் Moto G57 Power குறைந்த விலையில் வாங்கலாம் . அடிக்கடி சார்ஜ் செய்வதன் தொந்தரவை நீக்க, Motorola இந்த மாடலில் 7,000mAh பேட்டரியை வழங்கியுள்ளது. இது சிறந்த பர்போமன்சுக்கு Qualcomm ப்ரோசெசர் கொண்டுள்ளது.இந்த போனின் MRP விலை ரூ,17,999 ஆனால் பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,12,999க்கு வாங்கலாம் அதாவது இந்த போனில் 5,000ரூபாய் வரை டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் இதன் நன்மைகளை பற்றை பார்க்கலாம் வாங்க.

Moto G57 Power டிஸ்கவுண்ட் நன்மை

Moto G57 Power இ-காமர்ஸ் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் ₹13,999க்கு 22% தள்ளுபடியில் பட்டியலிடப்பட்டுள்ளது. கூடுதலாக, பிளிப்கார்ட் இந்த மாடலில் ₹1,000 வரை உடனடி வங்கி தள்ளுபடியை வழங்குகிறது, இதன் விலை ₹12,999 ஆகக் குறைகிறது. வங்கி தள்ளுபடியை ஆக்சிஸ், ஐசிஐசிஐ மற்றும் HDFC கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பெறலாம்.

Moto G57 Powe

நீங்கள் மோட்டோ ஜி57 பவரை EMI முறையில் வாங்க ஆர்வமாக இருந்தால், இந்த மாடலுக்கு 24 மாத EMI விருப்பத்தை Flipkart வழங்குகிறது. இந்த மாடலை மாதத்திற்கு தோராயமாக ₹612 EMI விருப்பத்துடன் வாங்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்ட்களின் டிஸ்கவுண்டை பெறலாம் மற்றும் இந்த போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனின் கண்டிஷன் பொருத்தது

Moto G57 Power 5G சிறப்பம்சம்.

Moto G57 Power போனில் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.72-இன்ச் Full-HD+ (1,080×2,400 பிக்ஸல்) ரெசளுசன் LCD ஸ்க்ரீன் உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் இதில் 1,050 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் வழங்கப்படுகிறது, மேலும் இதில் 20:09 எஸ்பெக்ட் ரேசியோ உடன் இந்த போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது.இதை தவிர இந்த போனில் Snapdragon 6s Gen 4 சிப்செட் உடன் 8GB யின் LPDDR4X ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது

இதையும் படிங்க 10,001mAh பேட்டரியுடன் Realme P4 Power 5G போன் அறிமுகம் வேற லெவல் அம்சங்கள் விலை பார்த்து தெருஞ்சிகொங்க

இதை தவிர Moto G57 Power போனில் போனின் மூன்று பின்புற கேமரா வழங்கப்படுகிறது 50-மெகாபிக்சல் (f/1.8) சோனி LYT-600 பிரைமரி ஷூட்டர். இது 119.5-டிகிரி பார்வை புலம் மற்றும் டூ-இன்-ஒன் லைட் சென்சார் கொண்ட 8-மெகாபிக்சல் (f/2.2) அல்ட்ராவைடு கேமராவையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இது 8-மெகாபிக்சல் (f/2.2) செல்ஃபி கேமராவைப் வழங்குகிறது . இது 60 fps வரை 2K ரெசளுசன் கொண்ட வீடியோக்களை படமாக்கும் திறன் கொண்டது.

இதனுடன் இந்த போனில் AI பவர்ட் கேமரா அம்சங்கள் கொண்டுள்ளது, இதில் ஆட்டோ ஸ்மைல் கேப்சர், மேஜிக் அழிப்பான், போட்டோ அன்பிளர், ரீமேஜின் ஆட்டோ ஃபிரேம், போர்ட்ரெய்ட் ப்ளர், போர்ட்ரெய்ட் லைட், ஸ்கை, கலர் பாப் மற்றும் சினிமாடிக் ஃபோட்டோஸ் ஆகியவை மோட்டோ ஜி57 பவர் மூலம் கூகிள் லென்ஸும் சப்போர்ட் செய்கிறது.இப்பொழுது இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 7,000mAh பேட்டரியுடன் 33W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது 166.23 x 76.50 x 8.60mm டைமென்ஷன் மற்றும் 210.6g இடை இருக்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :