மோட்டோரோலா யின் இந்த Motorola Edge 50 மிகவும் பாப்புலரான மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனில் ஒன்றாகும் மேலும் இது மிக சிறந்த ஹார்ட்வேர் உடன் ஒரு ப்ரீமியம் அம்சம் கொண்டிருக்கும் மேலும் இந்த போனில் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் ரூ,11,000 அதிரடியாக டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் பேங்க் ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
மோட்டோரோலா எட்ஜ் 50 தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.11,000 குறைந்து ரூ.21,999க்கு list செய்யப்பட்டுள்ளது . பிளிப்கார்ட் ஆக்சிஸ் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் போது கஸ்டமர்கள் ரூ.1,100 வரை கேஷ்பேக் பெறலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கிரெடிட் கார்டுகளில் கஸ்டமர்கள் நோ கோஸ்ட் EMI-யையும் பெறலாம்.
கூடுதலாக, அவர்கள் தங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் ரூ.29,400 வரை தள்ளுபடியைப் பெறலாம். இருப்பினும், வேல்யு வேலை நிலைமைகள் மற்றும் மாதிரியைப் பொறுத்தது.
மோட்டோரோலா எட்ஜ் 50 ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் P-OLED பேனலைக் கொண்டுள்ளது, இது 1.5K ரெசளுசன், HDR10+ சப்போர்ட் , 120Hz வரை ரெப்ரஸ் ரேட் மற்றும் 1600 nits ஹை ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது. இந்த போனில் கொரில்லா கிளாஸ் 5 ஆல் பாதுகாக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட Snapdragon 7 Gen 1 AE (Accelerated Edition) ப்றேசெசர் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், இது Android 14-அடிப்படையிலான Hello UI-யில் இயங்குகிறது.
இதையும் படிங்க Motorola யின் இந்த போனில் அதிரடி டிஸ்கவுண்ட் வெறும் ரூ.9000க்கு வாங்கலாம்
புகைப்படம் எடுப்பதற்காக, இந்த ஸ்மார்ட்போன் மூன்று கேமரா செட்டிங் கொண்டுள்ளது, இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50 மெகாபிக்சல் பிரதான கேமரா, 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் ஆகியவை அடங்கும். செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, எட்ஜ் 50 இல் 32 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் உள்ளது. மேலும், மோட்டோரோலா எட்ஜ் 50 68 வாட் வரை வேகமாக சார்ஜ் செய்வதற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.