200MP கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் Moto X30 Pro அறிமுகம்.

HIGHLIGHTS

Moto X30 Pro 2 ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது

200 மெகாபிக்சல் பிரதான கேமராவுடன் பொருத்தப்பட்டிருக்கும்

200 மெகாபிக்சல் கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்கிற பெருமையை இந்த மோட்டோ X30 ப்ரோ பெற உள்ளது.

200MP கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் Moto X30 Pro அறிமுகம்.

Moto X30 Pro 2  ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அறிமுகத்திற்கு முன்னதாக, சாதனம் 200 மெகாபிக்சல் பிரதான கேமராவுடன் பொருத்தப்பட்டிருக்கும் என்பதை மோட்டோரோலா உறுதிப்படுத்தியுள்ளது. இதனை அந்நிறுவனம் சமூக பதிவின் மூலம் உறுதி செய்துள்ளது. Moto Razr 2022 உடன் இந்த போன் வெளியிடப்படும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமே அதன் கேமரா தான் என கூறப்படுகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் 200 மெகாபிக்சல் கேமரா இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 200 மெகாபிக்சல் கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்கிற பெருமையை இந்த மோட்டோ X30 ப்ரோ பெற உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6.73 இன்ச் pOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 புராசஸரும் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி இடம்பெற்று இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி 4,500 எம்.ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரியும், 125 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் இடம்பெற்று உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile