50MP கேமரா மற்றும் 5000mAh பேட்டரியுடன் Moto G51 5G போன் விரைவில் அறிமுகமாகும்.

HIGHLIGHTS

மோட்டோரோலா நிறுவனம் விரைவில் புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது.

Moto G51 இந்தியாவில் டிசம்பர் 10 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படலாம்

மோட்டோரோலாவின் முதல் போன் இதுவாகும்.

50MP கேமரா  மற்றும் 5000mAh பேட்டரியுடன்  Moto G51 5G போன் விரைவில் அறிமுகமாகும்.

மோட்டோரோலா நிறுவனம் விரைவில் புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. செய்திகளின்படி, Moto G51 இந்தியாவில் டிசம்பர் 10 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படலாம். சில நாட்களுக்கு முன் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால், குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 SoC பிளஸ் பொருத்தப்பட்ட மோட்டோரோலாவின் முதல் போன் இதுவாகும். லீக்களின் படி , இந்த போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டாரேஜுடன் வழங்கப்படும். எனவே Moto G51 இன் சாத்தியமான விலை மற்றும் அம்சங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதுதவிர மோட்டோ ஜி31 ஸ்மார்ட்போன் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் டிசம்பர் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் பிராசஸர் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போனாக மோட்டோ ஜி51 5ஜி அறிமுகமாக இருக்கிறது.

 மோட்டோ ஜி51 5ஜி 

இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 12 5ஜி பேண்ட்களுக்கான வசதி வழங்கப்படுகிறது. மோட்டோரோலா சார்பில் புதிய ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றி எந்த தகவலும் வழங்கப்படவில்லை. அம்சங்களை பொருத்தவரை மோட்டோ ஜி51 மாடலில் 6.8 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் ஐ.பி.எஸ். எல்.சி.டி. டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் பிராசஸர், அட்ரினோ 619 ஜி.பி.யு. வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., 13 எம்.பி. செல்பி கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 50 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile