இந்திய சந்தையில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக, கைபேசி தயாரிப்பாளரான மோட்டோரோலா அதன் மிகவும் குறைந்த விலையில் அல்லது 5G மொபைல் போன் Moto G51 5G ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்களும் புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டு 15 ஆயிரம் வரை பட்ஜெட் இருந்தால், இந்த மொபைல் ஃபோனை நீங்கள் விரும்பலாம். இந்தியாவில் Moto G51 5G இன் விலை, கிடைக்கும் தன்மை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய விரிவான தகவலை இப்போது உங்களுக்கு வழங்குவோம்.
- 6.8 இன்ச் 2400x1080 பிக்சல் புல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. பிராசஸர்
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் பிராசஸர்
- அட்ரினோ 619 ஜி.பி.யு.
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 50 எம்.பி. பிரைமரி கேமரா
- 8 எம்.பி. அல்ட்ரா வைடு / டெப்த் கேமரா
- 2 எம்.பி. மேக்ரோ கேமரா
- 13 எம்.பி. செல்பி கேமரா
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- வாட்டர் ரெசிஸ்டண்ட்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 20 வாட் சார்ஜிங்
மோட்டோ ஜி51 5ஜி புதிய மிட்-ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. மோட்டோ ஜி51 5ஜி என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் 120 ஹெர்ட்ஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் பிராசஸர் கொண்டிருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் / டெப்த் கேமரா, 2 எம்.பி. மேக்ரோ கேமரா, 13 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். வழங்கப்பட்டுள்ளது.
புதிய மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் இண்டிகோ புளூ மற்றும் பிரைட் சில்வர் என இரு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. + 64 ஜி.பி. மெமரி ஆப்ஷன் விலை ரூ. 14,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 16 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.