நீங்கள் இந்தியாவில் ஸ்மார்ட்போனில் தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டைத் தேடுகிறீர்கள் என்றால், உள்நாட்டு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் உங்களுக்காக மைக்ரோமேக்ஸ் இன் 2 பி ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய போன் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மைக்ரோமேக்ஸ் இன் 1 பி யின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும்.
மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஸ்மார்ட்போன் புளூ, பிளாக் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 7,999 என்றும் 6 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 8,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மைக்ரோமேக்ஸ் இன் 2பி விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் இந்தியா வலைதளங்களில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி துவங்குகிறது.
– 6.52 இன்ச் 1600×720 பிக்சல் HD+ 20:9 டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் UNISOC T610 பிராசஸர்
– மாலி-G52 GPU
– 4 ஜிபி / 6 ஜிபி LPDDR4x ரேம்
– 64 ஜிபி eMMC 5.1 மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம்
– ஆண்ட்ராய்டு 11
– 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
– 2 எம்பி டெப்த் சென்சார்
– 5 எம்பி செல்பி கேமரா, f/2.2
– பின்புறம் கைரேகை சென்சார், பேஸ் அன்லாக்
– 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.0
– யு.எஸ்.பி. டைப் சி
– 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 10 வாட் சார்ஜிங்
புது ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிராப் நாட்ச் எல்.சி.டி. ஸ்கிரீன், ஆக்டாகோர் யுனிசாக் 610 பிராசஸர், மாலி ஜி52 GPU, 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 10 வாட் சார்ஜிங் உள்ளது.