6,000mAh பேட்டரி கொண்ட Lava Virat V1 Pro 5G ஸ்மார்ட்போன் அறிமுகம், பட்ஜெட் விலையில் சூப்பர் போன்

HIGHLIGHTS

Lava இந்தியாவில் இன்று அதன் Lava Virat V1 Pro 5G போனை அறிமுகம் செய்தது

இந்த செக்மாண்டில் வரும் இது மூன்றாவது மாடல் ஆகும்

இதன் விலை மற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க

6,000mAh பேட்டரி கொண்ட Lava Virat V1 Pro 5G ஸ்மார்ட்போன் அறிமுகம், பட்ஜெட் விலையில் சூப்பர் போன்

Lava இந்தியாவில் இன்று அதன் Lava Virat V1 Pro 5G போனை அறிமுகம் செய்தது. இந்த செக்மாண்டில் வரும் இது மூன்றாவது மாடல் ஆகும். இந்த செக்மண்டில் ஏற்கனவே Lava Virat V1 5G மற்றும் Virat V1 4G. போன் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் Lava Virat V1 Pro 5G போனில் 6,000mAh பேட்டரியுடன் பின்புறம் இரட்டை கேமரா கொண்டுள்ளது போன்ற அம்சங்கள் கொண்டுள்ளது இதன் விலை மற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Lava Virat V1 Pro 5G விலை தகவல்.

இந்தியாவில் லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி-யின் விலை , 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளக சேமிப்பு வசதி கொண்ட ஒரே வேரியண்ட்டிற்கு ரூ. 15,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் ரூ. 2,000 வரை பேங்க் தள்ளுபடியை வழங்குவதால், இதன் பயனுள்ள விலை ரூ. 13,999 ஆகக் குறைகிறது.

இந்தக் போன , ஆகஸ்ட் 31 அன்று இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு Flipkart வழியாக நாட்டில் விற்பனைக்கு வர உள்ளது.Lava Virat V1 Pro 5G சிக்கிம் மிட்நைட் மற்றும் ஸ்பிட்டி ஃப்ராஸ்ட் ஆகிய வண்ணத் தேர்வுகளில் வழங்கப்படுகிறது

Lava Virat V1 Pro 5G சிறப்பம்சம்.

Lava Virat V1 Pro 5G போனில் ஆண்ட்ராய்டு 16 உடன் வருகிறது மற்றும் 6.75-இன்ச் HD+ (720 x 1,600 பிக்சல்கள்) ரேசளுசன் உடன் இதில் LCD ஸ்க்ரீன் கொண்டுள்ளது, இது 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 260 ppi பிக்சல் டென்சிட்டி வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் யூனிசாக் T8200 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது, இது 2.6GHz ஹை ப்ரைத்னாஸ் கிளாக் ஸ்பீட் வழங்குகிறது, மேலும் 6GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

இதையும் படிங்க:புதிய போன் அறிமுகம் செய்யும் குஷியில் POCO M8 Power 5G போனில் சரவெடி டிஸ்கவுண்ட்

கேமராக்களைப் பொறுத்தவரை, லாவா விராட் V1 ப்ரோ 5G ஆனது இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில், ஸ்டேண்டர்ட் ஃபோகஸ் கொண்ட 50-மெகாபிக்சல் AI கேமராவும், குறிப்பிடப்படாத ஒரு இரண்டாம் கேமராவும் ப்ரைமரி கேமராவாக இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 8-மெகாபிக்சல் முன்புற கேமராவும் உள்ளது. டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் தாங்கும் திறனுக்காக இந்த போனில் IP64 ரேட்டிங்கை கொண்டுள்ளது என்று அந்நிறுவனம் கூறுகிறது

லாவா விராட் V1 ப்ரோ 5G, 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது கனெக்ஷன் வசதிக்காக 5G, 4G LTE, Wi-Fi 5, ப்ளூடூத் 5.4, ஒரு USB டைப்-சி போர்ட் மற்றும் GPS ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது . இதில் உள்ள சென்சார்களின் பட்டியலில் ஆக்சிலரோமீட்டர், பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், கைரோஸ்கோப், ஜியோமேக்னடிக் சென்சார், ஆம்பியன்ட் லைட் சென்சார் மற்றும் ப்ராக்சிமிட்டி சென்சார் ஆகியவை அடங்கும். இதன் பரிமாணங்கள் 168.29×77.64×8.68 mm மற்றும் இதன் எடை சுமார் 207 கிராம் ஆகும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile