Lava இந்திய சந்தையில் Lava Bold 2 5G போனை அறிமுகம் செய்தது, மேலும் இந்த போனில் MediaTek Dimensity 7060 ப்ரோசெசர் மற்றும் இந்த போனில் 5,000 mAh பேட்டரி உடன் 33 W வயர்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Lava Bold 2 5G போனை இந்தியாவில் வெறும் சிங்கிள் வேரியன்ட் 6 GB ரேம் மற்றும் 128 GB ஸ்டோரேஜ் வகையில் வருகிறது, இதன் விலை ரூ,12,999 ரூபாயாகும் இந்த போனின் விற்பனை அமேசானில் மார்ச் 19 தேதி ஆரம்பமாகும் மேலும் இந்த போனை Feather White மற்றும் Midnight Black கலரில் வாங்கலாம்
லாவா போல்ட் 2 5G இந்த போனில் இந்த போன் 6.67-இன்ச் முழு-HD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் பொருத்தப்பட்டுள்ளது, இது 120Hz வரை ரெப்ரஸ் ரேட்டை வழங்குகிறது. இந்த போனில் டஸ்ட் மற்றும் ஸ்பிளாஸ் ரெசிஸ்டன்ட் IP64 ரேட்டிங்கை கொண்டுள்ளது, ப்ளோட்வேர் இல்லாத மற்றும் விளம்பரமில்லாத பயனர் அனுபவத்தை வழங்கும்
லாவாவின் புதிய போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 2.6GHz உச்ச கிளாக் ஸ்பீடில் வேகத்தை வழங்குகிறது.மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 6GB LPDDR5 ரேம் மற்றும் 128GB UFS 3.1 உள் ஸ்டோரேஜ் உள்ளது. நிறுவனத்தின் புதிய இரட்டை சிம் ஸ்மார்ட்போன் ஆகும், இது ஆண்ட்ராய்டு 15 உடன் வருகிறது.
இதையும் படிங்க:புதுசா வந்த Nothing(4a) இன்று முதல் முறையாக விற்பனை அறிமுக சலுகயுயடன் அதிகபட்சமாக ரூ,7000 வரை டிஸ்கவுண்ட்
கேமரா துறையைப் பொறுத்தவரை, லாவா போல்ட் 2 5G பின்புறத்தில் இரட்டை கேமரா அலகு, LED ஃபிளாஷ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசியில் சோனி சென்சார் கொண்ட 50 மெகாபிக்சல் முதன்மை பின்புற கேமரா மற்றும் குறிப்பிடப்படாத இரண்டாம் நிலை ஷூட்டர் உள்ளது. லாவாவின் புதிய கைபேசியில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமராவும் உள்ளது, இது ஒரு துளை பஞ்ச் டிஸ்ப்ளே கட்அவுட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.
கடைசியாக பேட்டரி பற்றி பேசுகையில் இந்த போனில் 5,000mAh பேட்டரியுடன் 33W வயர்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் இன் டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது.