itel Vision 3 Turbo குறைந்த விலையில் பாஸ்ட் சார்ஜிங்குடன் அறிமுகம்.

Updated on 23-Sep-2022
HIGHLIGHTS

itel அதன் புதிய பட்ஜெட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் ஐட்டலான விஷன் 3 டர்போவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது

இந்த போன் ரூ.7,699 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

போனில் 6 ஜிபி டர்போ ரேம் உள்ளது. போனின் மற்ற ஸ்பெசிபிகேஷன் பற்றி தெரிந்து கொள்வோம்...

ஸ்மார்ட்போன் தயாரிப்பு கம்பெனி itel அதன் புதிய பட்ஜெட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் ஐட்டலான விஷன் 3 டர்போவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் ரூ.7,699 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறைந்த விலையில் 18W பாஸ்ட் சார்ஜிங்குடன் வரும் இந்தியாவில் இதுவே முதல் போன் என்று கம்பெனி கூறுகிறது. போனில் 6 ஜிபி டர்போ ரேம் உள்ளது. போனின் மற்ற ஸ்பெசிபிகேஷன் பற்றி தெரிந்து கொள்வோம்…

itel Vision 3 Turbo விலை மற்றும் கிடைக்கும்

மல்டி கிரீன், ஜூவல் ப்ளூ மற்றும் டீப் ஓஷன் ப்ளூ நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 3 ஜிபி ரேம் கொண்ட 64 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.7,699 விலையில் வாங்கலாம். போனுடன் ஒரு முறை திரை மாற்றும் வசதியும் வழங்கப்படுகிறது. போனை வாங்கிய 100 நாட்களுக்குள் உடைந்த ஸ்கிரீன் யூசர்கள் இலவசமாக மாற்றிக்கொள்ள முடியும்.

itel Vision 3 Turbo யின் ஸ்பெசிபிகேஷன்

இந்த போனில் 6.6 இன்ச் எச்டி பிளஸ் IPS வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே உள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 11 உடன் ஆக்டாகோர் UNISOC SC9863A ப்ரோசிஸோர் பெறுகிறது. போனுடன் 3 ஜிபி ரேம் சப்போர்ட் உள்ளது, ஆனால் டர்போ ரேம் பியூச்சர்களுடன் 6 ஜிபி வரை அதிகரிக்கலாம். போனில் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டின் உதவியுடன் போனின் ஸ்டோரேஜ் 128 ஜிபி வரை விரிவுபடுத்தலாம். 

itel Vision 3 Turbo யின் கேமரா

இரட்டை பின்புற கேமரா செட்அப் itel Vision 3 Turbo இல் கிடைக்கிறது. இதில் 8 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் இரண்டாம் நிலை சென்சார் AI கிடைக்கிறது. செல்ஃபி மற்றும் வீடியோ காலுக்கு 5 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. போன் பின்புற கேமராவுடன் LED ஃபிளாஷ் லைட் ஆதரிக்கப்படுகிறது.

itel Vision 3 Turbo யின் பேட்டரி

itel Vision 3 Turbo 5000 mAh பேட்டரியைப் பெறுகிறது, இது 18W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதனுடன் பிங்கர் ப்ரிண்ட் மற்றும் பேஸ் அன்லாக் பியூச்சர் போனில் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ளது. கனெக்ட்டிவிட்டி, Wi-Fi, Bluetooth 4.2, GPS, OTG மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் ஆகியவை ஆதரிக்கப்படுகின்றன

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :