Itel A24 Pro: 5 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் ஒரு சிறந்த ஸ்மார்ட்போன்.

Updated on 25-Jan-2023
HIGHLIGHTS

Itel A24 Pro ஆனது 850 x 480 பிக்சல்கள் ரெசொலூஷன் கொண்ட 5 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

Quad-core Unisoc SC9832E ப்ரோசிஸோர் ஆண்ட்ராய்டு 12 (Go Edition) உடன் போனியில் கிடைக்கிறது.

இந்த போன் தற்போது வங்கதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன் குறைவான விலையில் A சீரிஸ் வரிசையை விரிவுபடுத்தி, ஸ்மார்ட்போன் பிராண்டான Itel மற்றொரு புதிய போனான Itel A24 Pro அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் தற்போது வங்கதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவாட் கோர் யூனிசோக் SC9832E ப்ரோசிஸோர் மற்றும் 5 இன்ச் IPS LCD டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 12 கோ வெர்சனில் இயங்குகிறது மேலும் இது பேஸ் அன்லாக் வசதியையும் கொண்டுள்ளது. போனின் மற்ற குறிப்புகள் மற்றும் விலை பற்றி தெரிந்து கொள்வோம்…

Itel A24 Pro யின் விலை 
Itel இன் புதிய பட்ஜெட் போன் பங்களாதேஷில் BTD 5,990க்கு (தோராயமாக ரூ. 4,570) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன் 2 GB ரேம் + 32 GB ஸ்டோரேஜ் வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. போ ஒற்றை பச்சை வண்ண விருப்பத்தில் வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஸ்மார்ட்போன் பங்களாதேஷில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. இந்தியா உட்பட பிற பிராந்தியங்களில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட itel A24 Pro விலை மற்றும் கிடைக்கும் தன்மை இன்னும் வெளியிடப்படவில்லை.

Itel A24 Pro யின் ஸ்பெசிபிகேஷன்
Itel A24 Pro ஆனது 850 x 480 பிக்சல்கள் ரெசொலூஷன் கொண்ட 5 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. Quad-core 1.4GHz Unisoc SC9832E ப்ரோசிஸோர், ஆண்ட்ராய்டு 12 (Go Edition) உடன் போனியில் கிடைக்கிறது. இந்த போனில் 32 GB ஸ்டோரேஜ் மற்றும் 2 GB ரேம் உள்ளது. இருப்பினும், மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும். 

Itel A24 Pro வில் பாதுகாப்புக்காக பேஸ் அன்லாக் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. போனியில் 2 மெகாபிக்சல்கள் கொண்ட ஒற்றை பின்புற கேமரா உள்ளது, இது LED பிளாஷ் உடன் வருகிறது. செல்பி மற்றும் வீடியோ கால்களுக்கு 0.3 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. போனுடன் 3020 mAh பேட்டரி நிரம்பியுள்ளது. இவை தவிர, போன் 4G கனெக்ட்டிவிட்டி ஆதரிக்கிறது.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Connect On :