iQOO Z6 சீரிஸ் புது ஸ்மார்ட்போன் விலை மற்றும் தகவல் லீக்.

HIGHLIGHTS

ஐகூ நிறுவனம் Z6 சீரிசில் புது ஸ்மார்ட்போன் மாடலை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது

ஐகூ Z6 லைட் எனும் பெயரில் மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகமாகும் என தெரிகிறது

ஐகூ Z6 லைட் மாடலின் விலை விவோ T1x ஸ்மார்ட்போனை விட ரூ. 600 முதல் ரூ. 700 வரை குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும்

iQOO Z6 சீரிஸ் புது ஸ்மார்ட்போன் விலை மற்றும் தகவல் லீக்.

ஐகூ நிறுவனம் Z6 சீரிசில் புது ஸ்மார்ட்போன் மாடலை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஐகூ Z6 லைட் எனும் பெயரில் மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகமாகும் என தெரிகிறது. கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ T1x ஸ்மார்ட்போன் தான் ஐகூ Z6 லைட் எனும் பெயரில் ரிபிராண்டு செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

அந்த வகையில் ஐகூ Z6 லைட் மாடலில் 6.58 இன்ச் FHD+ LCD, 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமரா, 8MP செல்பி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். இது ஐகூ Z6 மாடலின் லைட் வெர்ஷன் என்பதால், 5ஜி கனெக்டிவிட்டி நீக்கப்படலாம்.

இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஐகூ Z6 லைட் ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அறிமுகம் செய்யப்படலாம். இது பட்ஜெட் பிரிவில் மிட் ரேன்ஜ் அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. ரிபிராண்டு செய்யப்பட்ட மாடல் என்ற பட்சத்தில் விவோ T1x மாடலில் உள்ளதை போன்ற அம்சங்களே ஐகூ ஸ்மார்ட்போனிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

ஐகூ Z6 லைட் மாடலின் விலை விவோ T1x ஸ்மார்ட்போனை விட ரூ. 600 முதல் ரூ. 700 வரை குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. தற்போதைய தகவல்களின் படி ஐகூ Z6 லைட் மாடலின் விலை ரூ. 11 ஆயிரத்து 499 என துவங்கும் என தெரிகிறது. விவோ T1x ஸ்மார்ட்போனின் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile