iQOO Z11x 5G Launched in India With 7200mAh Battery camera processor Price specs and features
iQOO இந்தியாவில் இன்று அதன் iQOO Z11x 5G போனை அறிமுகம் செய்தது இது Z11 வரிசயயொல் வரும் புதிய போன் ஆகும் இந்த போனில் 7,200mAh பேட்டரி மற்றும் இந்த போனில் MediaTek Dimensity 7400 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.
iQOO Z11x 5G போனின் 6GB + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ,18,999 யில் தொடங்குகிறது இதற்கிடையில், 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வழங்கும் ஹை எண்டு விருப்பத்தின் விலை ரூ. 20,999 ஆகும். இறுதியாக, 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட ஹை எண்டு வேரியண்டின் விலை ரூ. 22,999 ஆகும். ஆக்சிஸ் பேங்க் மற்றும் SBI கிரெடிட் கார்டுகளுடன் நிறுவனம் ரூ. 2,000 வரை இன்ஸ்டன்ட் தள்ளுபடியை வழங்குகிறது இந்த போனின் 6GB + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் ஆரம்பம் விலை ரூ,17499 இலிருந்து வாங்கலாம் மேலும் இந்த போனின் முதல் விற்பனை மார்ச் 16 பகல் பகல் 12 மணிக்கு amazon மற்றும் அதன் அதிகாரபூர்வ வெப்சைட்டிலிருந்து வாங்கலாம்.
iQOO Z11x 5G போனில் 6.76-இன்ச் கொண்ட LCD ஸ்க்ரீன் டிஸ்ப்ளே உடன் இதில் (1,080×2,344) பிக்சல் ரெசளுசன் வழங்குகிறது, இதனுடன் இந்த போனில் 1,200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் வழங்குகிறது மேலும் இந்த போனில் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்க்கு IP68 மற்றும் IP69+ ரேட்டிங் வழங்கப்படுகிறது
iQOOவின் புதிய போனில் 4nm ஆக்டா கோர் MediaTek Dimensity 7400 டர்போ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. SoC நான்கு பர்போமான்ஸ் கோர்களைக் கொண்டுள்ளது, இது 2.6GHz ஹை கிளாக் ஸ்பீட் 2.0GHz யில் பர்போமான்ஸ் கோர்களையும் வழங்குகிறது. iQOO Z11x 5G ஆனது 8GB வரை LPDDR4x ரேம் மற்றும் 256GB வரை UFS 3.1 இன்டெர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இது செக்யூரிட்டிக்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனரையும் கொண்டுள்ளது.
இதையும் படிங்க:புதூச அறிமுகமான Motorola 70 Fusion இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது
ஒளியியலைப் பொறுத்தவரை, iQOO Z11x 5G இரட்டை பின்புற கேமரா செட்டிங்குடன் வருகிறது, கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவும், 2-மெகாபிக்சல் பொக்கே கேமராவும் இணைக்கப்பட்டுள்ளன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக இந்த போனில் 32-மெகாபிக்சல் முன் பேஸிங் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இதை தவிர கடைசியாக இந்த போனில் பேட்டரிக்கு iQOO Z11x 5G ஆனது 44W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் 7,200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 5G, 4G LTE, டூயல்-பேண்ட் Wi-Fi, ப்ளூடூத் 5.4, USB டைப்-சி போர்ட், GPS, BeiDou, GLONASS, கலிலியோ மற்றும் QZSS ஆகியவற்றை இணைப்பிற்காக ஆதரிக்கிறது. இதில் 166.6×78.4×8.4 mm திக்னஸ் மற்றும் சுமார் 219 கிராம் எடை கொண்டது.