iQOO 15 launched in India Check price Specs features and other details
சீனா ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான iQOO இந்தியாவில் அதன் ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் iQOO 15 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் விலை ஹை ரேஞ்சில் இருக்கிறது, இந்த போனில் Snapdragon 8 Elite Gen 5 ப்ரோசெசர் மற்றும் 3D அல்ட்ராசொனிக் பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்குகிறது மேலும் இந்த போனின் அம்சங்கள் மற்றும் விலை தகவலை பார்க்கலாம் வாங்க.
iQOO 15 ஸ்மார்ட்போனின் 12GB + 256GB ஸ்டோரேஜ் வகை ரூ,72,999 விலையிலும், 16GB + 512GB ஸ்டோரேஜ் வகை ₹79,999 விலையிலும் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா மற்றும் iQOO இந்தியா வெப்சைட்டில் விற்பனைக்கு கிடைக்கும் . இது லெஜண்ட் மற்றும் ஆல்பா பிளாக் கலர்களில் வரும்.
iQOO 15 யின் இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.85-இன்ச் Samsung 2K M14 LTPO OLED டிஸ்ப்ளே 144Hz ரெப்ராஸ் ரெட்டுடன் இதில் 2600 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்கப்படுகிறது, இதில் தெளிவான Dolby Vision சர்டிபிகேஷன் மூலம் தெளிவான டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க அட OnePlus இப்போ தான் ஒரு புது போன் கொண்டு வந்தாங்க, மறுபடியும் ஒரு புதிய போனா எந்த மாடல் பாருங்க
மேலும் இந்த போனில் Snapdragon 8 Elite Gen 5 ப்ரோசெசருடன் 16GB ரேம் உடன் 512GB UFS 4.1 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த போனில் 7000mAh பேட்டரியுடன் 100W ப்ளாஷ் சார்ஜிங் சப்போர்ட் உடன் இதில் அல்ட்ரா கேம் மோட் AI இன்டலிஜன்ஸ் டிரைவ் போன்ற அம்சங்கள் வழங்குகிறது
iQOO 15 இப்பொழுது கேமரா அம்சம் பற்றி பேசினால் இதில் OIS சப்போர்டுடன் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 3x ஆப்டிகல் ஜூம், 3.7x லாஸ்லெஸ் ஜூம் மற்றும் 10x ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ பெரிஸ்கோப் கேமரா மற்றும் 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ காலிற்கு 32-மெகாபிக்சல் முன் கேமரா கிடைக்கிறது.
இந்த போனில் AI வியுவ் மற்றும் எரேசர் அம்சங்களுடன் வருகிறது, இது ஸ்டேண்டர்ட், போர்ட்ரைட் மற்றும் வெர்டிக்கள் கேமரா முறைகளில் கிடைக்கிறது. iQOO இலிருந்து வரும் இந்த 5G போன் IP68 + IP69 ரேட்டிங் கொண்டுள்ளது, இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் உறுதி செய்கிறது. டைமென்ஷன் 8.17 mm தடிமன் மற்றும் 220 கிராம் எடை கொண்டது.