iQOO 12 price drop
நீங்கள் ஒரு புதிய கேமிங் ஸ்மார்ட்போன் பிரியராக இருந்தால் நீங்கள் iQOO 12 போனை மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த போனை அமேசானில் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் சலுகையுடன் வெறும் ரூ.44,999க்கு வாங்கலாம் ஆனால் இந்த போன் இந்தியாவில் ரூ,57,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது மேலும் இந்த போனில் AMOLED டிஸ்ப்ளே மற்றும் Snapdragon 8 ப்ரோசெசர் கொண்டிருக்கும் மேலும் இதன் அம்சம் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
iQOO 12 தற்போது அமேசானில் ரூ.44,999க்கு எந்த பேங்க் சலுகைகளும் இல்லாமல் கிடைக்கிறது, இது ரூ.57,999 ஆக இருந்தது. உங்களிடம் Amazon Pay ICICI வங்கி கிரெடிட் கார்டு இருந்தால், ரூ.1,349 வரை கேஷ்பேக் பெறலாம். மாதத்திற்கு ரூ.2,182 யில் தொடங்கும் EMI விருப்பங்களையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.
மேலும், கஸ்டமர்கள் தங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் ரூ.39,000 வரையிலானஎக்ஸ்சேஞ் ஆபர் நன்மை வழங்கப்படுகிறது, உங்கள் பழைய போனின் சரியான எக்ஸ்சேஞ் வேல்யு போனின் வேரியன்ட் மற்றும் கண்டிசனை பொறுத்தது என்பதை நினைவில் கொள்ளவும்.
iQOO 12 ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் 1.5K ரேசளுசன் , HDR10+ சப்போர்ட் மற்றும் 144Hz மாறி ரெப்ரஸ் ரெட்டுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது, அப்டேட் செய்யப்பட்ட கேமிங் பர்போமன்சுக்கு Q1 கேமிங் சிப்செட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போன் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.
இந்த போனில் 50MP ப்ரைம் சென்சார், 50MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் 100x டிஜிட்டல் ஜூம் கொண்ட 64MP டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 16MP முன் கேமராவையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 120W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 5,000mAh பேட்டரி மூலம் சப்போர்ட் செய்யப்படுகிறது .
இதையும் படிங்க Google யின் இந்த போனில் அதிரடியாக ரூ,18000 டிஸ்கவுண்ட் வேற லெவல் ஆபர்