iPhone 14 Series அறிமுக தேதி லீக் ஆகியுள்ளது, இதன் விலை என்ன இருக்கும்.?

HIGHLIGHTS

ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் பற்றிய வதந்திகளின் சந்தை சூடாக உள்ளது,

புதிய தொடருடன் வேறு என்ன தயாரிப்புகளை அறிமுகப்படுத்தலாம் என்பது தொடர்பான தகவல்கள் லீக் ஆகியுள்ளன

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14, ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 மேக்ஸ் மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என நான்கு புது ஐபோன் மாடல்களை அறிமுகம்

iPhone 14 Series அறிமுக தேதி  லீக் ஆகியுள்ளது, இதன் விலை என்ன இருக்கும்.?

ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் பற்றிய வதந்திகளின் சந்தை சூடாக உள்ளது, நீண்ட காலமாக, ஆப்பிளின் வரவிருக்கும் தொடரைப் பற்றிய லீக்கள் வெளிவருகின்றன. இப்போது சமீபத்தில் ஒரு புதிய கசிவு ஐபோன் 14 தொடரின் வெளியீட்டு தேதி மற்றும் நிறுவனத்தின் இந்த புதிய தொடருடன் வேறு என்ன தயாரிப்புகளை அறிமுகப்படுத்தலாம் என்பது தொடர்பான தகவல்கள் லீக் ஆகியுள்ளன 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14, ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 மேக்ஸ் மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என நான்கு புது ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புது தகவலில் ஆப்பிளஅ நிறுவனம் மூன்று ஆப்பிள் வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் உயரமான ப்ரோபைல், சிறப்பான கேமரா மாட்யுல்கள் இடம்பெற்று இருக்கலாம். இரு ப்ரோ மாடல்களிலும் மூன்று கேமரா சென்சார்கள், 48MP வைடு, 12MP அல்ட்ரா வைடு மற்றும் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படலாம். இத்துடன் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடலில் 8K வீடியோ வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஐபோன் 14 ப்ரோ மாடலில் அதிகபட்சமாக 8GB ரேம், 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே வழங்கப்படலாம். 

மூன்று ஆப்பிள் வாட்ச் மாடல்களில் வாட்ச் 8, பட்ஜெட் விலையில் வாட்ச் SE மற்றும் புதிய வாட்ச் எக்ஸ்டிரீம் எடிஷன் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஆப்பிள் வாட்ச் மாடல்கள் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஐபோன் 14 அறிமுக நிகழ்விலேயே வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இது மட்டுமின்றி நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 இயர்பட்ஸ் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடலில் உடலின் வெப்பநிலையை கணக்கிடும் அம்சம் வழங்கப்படலாம். இத்துடன் அதிவேக பிராசஸர், மேம்பட்ட ஆக்டிவிட்டி டிராக்கிங் அம்சங்கள், கார் கிராஷ் டிடெக்‌ஷன் அம்சம் வழங்கப்படும் என தெரிகிறது. 

iPhone 14 Series Price (எதிர்ப்பார்க்கப்படும் )

இது தவிர, ஐபோன் 14 தொடரின் விலையில் உள்ள வித்தியாசத்தையும் இந்த ஆண்டு காணலாம். கடந்த ஆண்டு நிறுவனம் தனது ஐபோன் 13 தொடரை அறிமுகப்படுத்தியபோது, ​​​​நிறுவனம் ஐபோன் 12 தொடரின் விலையைப் போலவே இருந்தது என்பதை நினைவில் கொள்க. ஆனால் இந்த ஆண்டு ப்ரோ மாடல்களின் விலை $100 அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile