IPHONE 12 SERIES அக்டோபர் 13 அறிமுகமாகும் மற்றும் பல தகவல் வெளியானது.

HIGHLIGHTS

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் அக்டோபர் 13 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட

ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸின் மாடல் மற்றும் விலையும் வெளியிடப்பட்டது.

புதிய ஐபோன்களின் முன்பதிவு அக்டோபர் 16 ஆம் தேதி துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

IPHONE 12 SERIES அக்டோபர் 13 அறிமுகமாகும் மற்றும் பல தகவல் வெளியானது.

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் அக்டோபர் 13 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புதிய ஐபோன்களின் முன்பதிவு அக்டோபர் 16 ஆம் தேதி துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

கவனிக்க வேண்டியது என்னவென்றால், சமீபத்தில் ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸின் மாடல் மற்றும் விலையும் வெளியிடப்பட்டது. ஐபோன் 12 சீரிஸை அக்டோபரில் எந்த நேரத்திலும் அறிமுகப்படுத்த முடியும் என்று நம்பப்படுகிறது, இது தவிர, இந்த முறை நான்கு புதிய ஐபோன்களை ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்த முடியும் என்பதும் தெரிய வந்துள்ளது. இது குறித்த தகவல்கள் பிரபலமான டிப்ஸ்டர் மூலம் வருகின்றன. ஐபோன் 12 மினியை மற்ற மூன்று ஐபோன் மாடல்களுடன் ஆப்பிள் நிறுவனமும் அறிமுகப்படுத்தலாம் என்று இங்கே எழுதப்பட்டுள்ளது.

ஐபோன் 12 சீரிஸ் மாடல்களின் துவக்க விலை 750 டாலர்கள் வரை இருக்கும் என தெரிகிறது. முந்தைய ஐபோன் 11 மாடல் விலை 699 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. புதிய ஐபோன்களில் OLED டிஸ்ப்ளே, ஏ14 பயோனிக் சிப், குவால்காம் 5ஜி மோடெம் மற்றும் ஆன்டெனா உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய ஐபோன்களின் வெளியீடு பற்றி ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், ஏற்கனவே வெளியான தகவல்களிலும் புதிய ஐபோன் 12 சீரிஸ் அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டு இருந்தது.

இதுவரை வெளியாகி உள்ள தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் 5.4 இன்ச் ஐபோன் 12 மினி, 6.1 இன்ச் ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட மாடல்களை அறிமுகம் செய்யும் என கூறப்பட்டுள்ளது. இதில் ப்ரோ மாடல்களில் ஆப்பிள் LiDAR சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo