இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் S5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.6 இன்ச் HD . பிளஸ் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படம் எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, குவாட் LED . ஃபிளாஷ், 5 எம்.பி. 114-டிகிரி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது.
முன்புறம் 32 எம்.பி. இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், 3டி க்ரிஸ்டல் ஃபெதர் கிளாஸ் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் சிம் கார்டு ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் மற்றும் 4000Mah .பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
இன்ஃபினிக்ஸ் எஸ்5 ஸ்மார்ட்போன் குயிட்ஸெல் சியான் மற்றும் வைலட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஃப்ளிப்கார்ட் மற்றும் அக்டோபர் 21 ஆம் தேதி துவங்குகிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.