Infinix NOTE Edge 5G
Infinix சமிபத்தில் அதன் புதிய Infinix Note edge சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து இன்று இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் இந்த போன் முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது, இந்த போனில் 6,500mAh பேட்டரியுடன் மற்றும் இதில் 3D கர்வ்ட் டிஸ்ப்ளே மற்றும் XOS 16. இந்த போன் இ-சிம் சப்போர்ட் வழங்கப்படுகிறது மேலும் முதல் அறிமுக சலுகையாக இந்த போனை வெறும் ரூ,19,999 யில் வாங்கலாம்.
Infinix Note Edge 5G போனின் பிப்ரவரி 25 இன்று பிளிப்கார்டில் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது 6GB/128GB ரேம் ஸ்டோரேஜ் விலை ரூ,21,999 ஆகும் அதுவே அதன் 8GB/128GB மற்றும் 8GB/256GB ரேம் ஸ்டோரேஜ் விலை ரூ,23,999 மற்றும் ரூ, 25,999 ஆகும், ஆனால் அறிமுக சலுகையாக பேங்க் ஆபரின் கீழ் ரூ,2000 டிஸ்கவுன்ட்க்கு பிறகு இதன் விலை ரூ,19,999 யிலிருந்து வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல நன்மை பெறலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது.
Infinix Note Edge 5G போன் 6.78-இன்ச் முழு HD+ 3D கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது, இதனுடன் இதில் 4,500 நிட்ஸ் ப்ரைட்னஸ் TUV Blue Light சர்டிபிகேஷன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i ப்ரொடெக்ஷன் உடன் வருகிறது.
இதையும் படிங்க வேற லெவல் ஆபர் iPhone 17 மாடலுக்கு அதிரடியாக ரூ,8,000 டிஸ்கவுண்ட்
இந்த சாதனம் மீடியாடெக் டைமன்சிட்டி 7100 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 8 ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் 256 ஜிபி வரை UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் AnTuTu இல் 7,50,000 புள்ளிகளைப் பெற முடிந்தது, மேலும் 90fps கேம்ப்ளேவை ஆதரிப்பதாகவும் கூறப்படுகிறது. சாப்ட்வேர் முன்னணியில், இது XOS 16 உடன் Android 16 யில் இயங்குகிறது, இது ஒளி மற்றும் நிழலை ஐகான்கள் மற்றும் நிலைப் பட்டியில் ஒருங்கிணைக்கும் ஒரு வடிவமைப்பு மொழியான Glow Space ஐ அறிமுகப்படுத்துகிறது. இது 3 OS மேம்படுத்தல்கள், 5 வருட பாதுகாப்பு கனெக்ஷன் பெறுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,
இதனுடன் இந்த போனில் 50MP டுயல் பின் கேமரா மற்றும் செல்பிக்கு 13MP முன் கேமரா வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனில் 6,500mAh பேட்டரியுடன் 45 W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது மேலும் இந்த போனை tellar Blue, Silk Green, மற்றும் Lunar Titanium.போன்ற கலரில் வாங்கலாம்