ஹூவாய் மேட் 20 ப்ரோ 3D ஃபேஸ் அன்லாக் வசதியுடன் இந்தியாவில் அறிமுகம்

Updated on 28-Nov-2018
HIGHLIGHTS

இந்தியாவில் ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிவித்தப்படி அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிவித்தப்படி அறிமுகம் செய்யப்பட்டது.  ஹூவாய் மேட் 20 ப்ரோ என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் முன்னதாக லண்டனில் நடைபெற்ற விழாவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது .

புதிய ஹூவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சஎன்சார், 10-லெவல் டைனமிக் பிரெஷர் சென்சிங் தொழில்நுட்பம், 3D ஃபேஸ் அன்லாக், 3D லைவ் எமோஜி மற்றும் ஏ.ஐ. லைவ் மாடல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய ஹூவாய் மேட் ஸ்மார்ட்போன்களில் மூன்று பிரைமரி கேமரா மேட்ரிக்ஸ் சிஸ்டம் மற்றும் OIS வழங்கப்பட்டுள்ளது.

மேட் 20 ஸ்மார்ட்போனில் லெய்கா அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் மேக்ரோ டிஸ்டன்ஸ் வசதி கொண்டுள்ளது. மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் 40 எம்.பி. பிரைமரி கேமரா, 20 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கில் கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஹூவாய் மேட் 20 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 6.39 இன்ச் 3120×1440 பிக்சல் QHD+ OLED 19:5:9 டிஸ்ப்ளே
– ஹூவாய் கிரின் 980 பிராசஸர்
– 720 MHz ARM மாலி-G76MP10 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
– 40 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8
– 20 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
– 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
– 24 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.0
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3D ஃபேஸ் அன்லாக்
– வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68)
– டூயல் ஸ்பீக்கர்கள்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4200mah . பேட்டரி
– 40 வாட் சூப்பர்சார்ஜ், 15 வாட் வயர்லெஸ் க்விக் சார்ஜ்

ஹூவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் மிட்நைட் புளு, பிளாக், டுவிலைட் மற்றும் எமரால்டு கிரீன் உள்ளி்ட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஹூவாய் மேட் 20 ப்ரோ விலை ரூ.69,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹூவாய் மேட் 20 ப்ரோ டிசம்பர் 3ம் தேதி முதல் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.

அறிமுக சலுகையாக புதிய ஹூவாய் மேட் 20 ப்ரோ மற்றும் சென்ஹெய்சர் PXC550 வயர்லெஸ் ஹெட்போன்கள் (விலை ரூ.29,990) இணைந்து ரூ.71,990 விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :