Redmi 7A இன்று அறிமுகம் இங்கே பார்க்கலாம் அதன் லைவ் ஸ்ட்ரீமிங்.

Updated on 04-Jul-2019
HIGHLIGHTS

Xiaomi இந்த அறிமுகம் இன்று பகல் 12 மணிக்கு இதன் அறிமுகம் ஆரம்பமாகிறது மற்றும் நிறுவனம் YouTube பக்கத்திலும் இதை லைவ் லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய முடியும்,

Redmi 7A இன்று இந்தியாவில் அறிமுகமாக இத்திருக்கிறது மற்றும் சியோமி அறிமுக நிகழ்வை நீங்கள் வீட்டில் இருந்தபடியே  அதன் லைவ் ஸ்ட்ரீமிங் பார்க்க முடியும், மேலும் இந்த ஸ்மார்ட்போனை இரண்டு மாதத்திற்கு  முன்னரே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் இப்பொழுது அதனை தொடர்ந்து இன்று இந்தியாவில் அறிமுகமாக உள்ளது Redmi 7A சமீனத்தில் அறிமுகமான  Redmi 7 யின் அடுத்த வெர்சன் என கூறப்படுகிறது.மற்றும் இந்த சாதனத்தின்  5.45 இன்ச் டிஸ்பிளே வழங்கப்படுகிறது மற்றும் இதில்  4,000mAh  பேட்டரி  வழங்கப்படுகிறது.

Xiaomi இந்த அறிமுகம் இன்று பகல் 12 மணிக்கு இதன் அறிமுகம் ஆரம்பமாகிறது மற்றும் நிறுவனம் YouTube பக்கத்திலும் இதை லைவ் லைவ் ஸ்ட்ரீமிங்  செய்ய முடியும், அதன் பிறகு இதன் விலை தகவலை நாம்  இங்கு அறியமுடியும்.

REDMI 7A  ஸ்மார்ட்போனினை சிறப்பம்சங்களை பொருத்தவரை REDMI 7A  ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச்HD  பிளஸ் 720×1440 பிக்சல் ஐ.பி.எஸ். எல்.சி.டி. டிஸ்ப்ளே, 1.95 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் புகைப்படங்களை அழகாக்க ஏ.ஐ. அம்சங்கள் மற்றும் பல்வேறு கேமரா மோட்கள் கிடைக்கிறது. முன்புறம் 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 4000 Mah  பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் 10 வாட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டோரேஜ் பொருத்தவரை ரெட்மி 7ஏ மாடலில் 2 ஜி.பி. ரேம் + 16 ஜி.பி. மெமரி, 2 ஜி.பி. ரேம் + 32 ஜி.பி. மெமரி மற்றும் 3 ஜி.பி. ரேம் + 32 ஜி.பி. மெமரி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. 

கனெக்டிவிட்டியை பொருத்தவரை டூயல் சிம் ஸ்லாட், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2,. ஜி.பி.எஸ்., மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் மற்றும் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் கொண்டிருக்கிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :