Honor பிராண்டின் புதிய 9எக்ஸ் ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் FHD பிளஸ் நாட்ச் இல்லா டிஸ்ப்ளே, கிரின் 710எஃப் சிப்செட், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் மற்றும் EMUI 9.1 வழங்கப்பட்டுள்ளது.
விலை மற்றும் விற்பனை சலுகை
இந்தியாவில் இதன் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 13,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை நேற்று (ஜனவரி 19) துவங்கிய நிலையில், தற்சமயம் ஹானர் 9எக்ஸ் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.இதன் அப்பர் பற்றி பேசினால் CICI Bank க்ரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.
– 6.59 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 19.5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் கிரின் 710 எஃப் பிராசஸர்
– ARM மாலி-G51 MP4 GPU
– 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.1.1
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 0.8μm பிக்சல், f/1.8
– 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் சென்சார், f/2.4
– 2 எம்.பி. டெப்த் கேமரா, f/2.4
– 16 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா, f/2.2
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. சூப்பர் வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. போர்டிரெயிட் கேமரா, 16 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் சஃபையர் புளூ நிறங்களில் கிடைக்கிறது.