இந்தியாவில் Honor 10 ஸ்மார்ட்போன் Rs,32999க்கு அறிமுகமானது

இந்தியாவில் Honor 10 ஸ்மார்ட்போன் Rs,32999க்கு  அறிமுகமானது
HIGHLIGHTS

ஹூவாயின் ஹானர் பிரான்டு தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஹூவாய் Honor பிரான்டு புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஹானர் 10 என அழைக்கப்படும் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் முன்னதாக சீனாவில் அறிமுகமானது. 5.84 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் நாட்ச் ரக டிஸ்ப்ளே, 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, ஆக்டா-கோர் ஹைசிலிகான் கிரின் 970 சிப்செட், i7 கோ-பிராசஸர், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.1 வழங்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு 2.0 தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் புதிய ஸ்மார்ட்போனின் வடிவைப்பு ஹூவாய் P20 போன்றே காட்சியளிக்கிறது. போட்டோக்கள் எடுக்க 16 எம்பி + 24 எம்பி பிரைமரி கேமரா செட்டப், முன்பக்கம் 24 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய ஹானர் 10 ஸ்மார்ட்போனில் ஹூவாய் நிறுவனத்தின் அதிநவீன AI (செயற்கை நுண்ணறிவு) 2.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் முன்பக்க கேமராவினை பயன்படுத்தி அழகிய போர்டிரெயிட் செல்ஃபிக்களை வழங்கும்.

3400 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஹானர் 10 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, டூயல் சிம் ஸ்லாட் மற்றும் டூயல் 4ஜி வோல்ட்இ வசதி கொண்டிருக்கிறது. இதன் அல்ட்ராசோனிக் பிங்காரப்ரின்ட்  சென்சார் விரல்கள் ஈரமாக இருந்தாலும் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹானர் 10 ஸ்பெசிபிகேஷன் :

– 5.84 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080×2240 பிக்சல் எல்சிடி, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஹைசிலிகான் கிரின் 970 சிப்செட்
– மாலி-G72 MP12 GPU
– 6 ஜிபி ரேம்
– 16 எம்பி + 24 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
– 24 எம்பி செல்ஃபி கேமரா
– 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார்
– 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3400 எம்ஏஹெச் பேட்டரி
– குவிக் சார்ஜிங் வசதி

இந்தியாவில் ஹானர் 10 ஸ்மார்ட்போன் ஃபேன்டம் புளு மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் ஹானர் 10 விலை ரூ.32,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

ஹானர் 10 அறிமுக சலுகைகள்:

– ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.5000 வரை தள்ளுபடி
– வட்டியில்லா மாத தவனை முறை வசதி
– தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 10% உடனடி தள்ளுபடி
– ரிலையன்ஸ் ஜியோ சார்பில் ரூ.1200 கேஷ்பேக், 100 ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் ரூ.3300 மதிப்புடைய வவுச்சர்கள் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo