கூகிளின் மினி பிக்சல் போனை அறிமுகம் செய்யும். தகவல் லீக் ஆகியுள்ளது.

HIGHLIGHTS

கூகுள் நிறுவனம் அக்டோபர் 6 ஆம் தேதி "மேட் பை கூகுள்" பெயரில் ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது

கூகுள் நிறுவனம் அக்டோபர் மாத முதல் வாரத்தில் புதிய பிக்சல் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்த நிகழ்வில் பிக்சல் 7 சீரிஸ், பிக்சல் வாட்ச் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகமாகும் என கூகுள் ஏற்கனவே அறிவித்து இருக்கிறது.

கூகிளின் மினி பிக்சல் போனை அறிமுகம் செய்யும். தகவல் லீக் ஆகியுள்ளது.

கூகுள் நிறுவனம் அக்டோபர் 6 ஆம் தேதி "மேட் பை கூகுள்" பெயரில் ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது. முன்னதாக நடைபெற்ற கூகுள் I/O 2022 நிகழ்வில் இந்த ஆண்டு பிக்சல் 7 சீரிஸ் மற்றும் பிக்சல் வாட்ச் சாதனங்களை அறிமுகம் செய்வதாக கூகுள் அறிவித்து இருந்தது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இரு சாதனங்களை அறிமுகம் செய்வதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், பிக்சல் டேப்லெட் மாடல் ஒன்றை கூகுள் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த சாதனம் 2023 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இது தவிர பிக்சல் சீரிசில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் மினி பிக்சல் போன் உள்ளிடடிவை அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் கூகுள் நிறுவனம் சிறிய ஸ்கிரீன் கொண்ட பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் நெய்லா எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மத்தியில் பன்ச் ஹோல் வைக்கப்படுகிறது. இது பிக்சல் 6 மற்றும் பிக்சல் 7 சீரிஸ் மாடல்களில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.

இவை தவிர ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பிக்சல் 7 சீரிஸ் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile