ஒட்டுமொத்த மக்களும் காத்திருந்த Google Pixel 10a அறிமுகம் மிக பெரிய பேட்டரி அம்சங்கள் பற்றி பாருங்க

Updated on 18-Feb-2026
HIGHLIGHTS

Google Pixel 10a இந்திய சந்தையில் அறிமுகம்

Google Pixel 10aபோன் இந்தியாவில் ரூ,49,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது

இந்த போனில் Tensor G4 சிப்செட் உடன் வரும்

Google இன்று அதன் நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த Google Pixel 10a இந்திய சந்தையில் அறிமுகம். இந்த போன் மிட் ரேன்ஜ் பிரிவில் கொண்டு வரப்பட்டதால் அனைவரும் வாங்க முடியும் மற்றும் இந்த போனில் Tensor G4 சிப்செட் உடன் வரும் இந்த போனில் 5,100mAh பேட்டரி வருகிறது மேலும் இந்த போனில் அட்வான்ஸ்ட் உடன் AI அம்சங்களுடன் வருகிறது மேலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Google Pixel 10a விலை மற்றும் விற்பனை தகவல்

Google Pixel 10aபோன் இந்தியாவில் ரூ,49,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் இந்த போனின் ப்ரீ ஆர்டர் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் மேலும் இந்த போனில் மார்ச் 6,2026. வாங்கலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட HDFC பேங்க் கார்ட்களில் கஸ்டமர்கள் ரூ.3,000 கேஷ்பேக் பெறலாம். இது 24 மாதங்கள் வரை இலவச EMI விருப்பங்கள் மற்றும் ரூ.3,000 எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் வருகிறது. மேலும் நீங்கள் இந்த போனில் ரூ, 2,083 மாதந்திர நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம்

Google Pixel 10a சிறப்பம்சம்.

Google Pixel 10a போன் 6.3-இன்ச் Actua டிஸ்ப்ளே உடன் 3,000 நிட்ஸ் யின் பீக் ப்ரைட்னஸ் உடன் இதில் Gorilla Glass 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் 4mm பெஸல்லெஸ் ஸ்க்ரீன் உடன் இந்த போன் அலுமினியம் பிரேம் உடன் வருகிறது.

இதையும் படிங்க புதுசா அறிமுகமான Infinix ஸ்மார்ட்போன் 6,500mA உடன் ஸ்லிம்மான டிஸ்ப்ளே இருக்கும்

மேலும் இந்த போனின் ப்ரோசெசருக்கு Tensor G4 சிப்செட்டுடன் இந்த போன் 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வகையில் வரிகிறது மேலும் இந்த போனில் IP68 யின் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் சப்போர்ட் வழங்குகிறது Pixel 10a ஆனது Android 16 இல் இயங்குகிறது மற்றும் ஏழு வருட OS மற்றும் பாதுகாப்பு அப்டேட்களை வழங்குகிறது. இது புகைப்படங்களை எடுக்கும்போது பயனர்களுக்கு வழிகாட்டும் Camera Coach மற்றும் சிறந்த வெளிப்பாடுகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் சிறந்த குழு புகைப்படங்களை உருவாக்க உதவும் Auto Best Take உள்ளிட்ட பல AI அம்சங்களையும் கொண்டு வருகிறது.

மேலும் இந்த போனின் கேமரா அம்சங்கள் பொறுத்தவரை Pixel 10a யில் டுயல் கேமரா செட்டப் 48MP பிரைமரி கேமரா லென்ஸ் மற்றும் 13MPஅல்ட்ரா வைட் லென்ஸ் வழங்கப்படுகிறது. மற்றும் இதில் செல்பிக்கு 13MP கேமரா வழங்கப்படுகிறது

மேலும் இந்த போனில் 5,100mAh பேட்டரியுடன் 30W வயர்ட் சார்ஜிங் மற்றும் 10Wவயர்லெஸ் சார்ஜிங் சப்போர்டுடன் இது சுமார் 30 மணி நேரம் வரை நீடிக்கும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :