டிசம்பர் 26 விற்பனைக்கு வரும் Asus ROG Phone 5 ஸ்மார்ட்போன்.

HIGHLIGHTS

ROG Phone 5 ஐ இந்த ஆண்டு தொடக்கத்தில் மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது

Asus ROG Phone 5 Ultimate இந்தியாவில் முதன்முறையாக 18GB RAM மாறுபாட்டுடன் விற்பனைக்குக் கொண்டுவரப்பட உள்ளது

இந்த விற்பனை Flipkart இல் டிசம்பர் 26 அன்று மதியம் 12 மணிக்கு தொடங்கும். போனின் விலை ரூ.79,999 ஆக இருக்கும்.

டிசம்பர் 26 விற்பனைக்கு வரும் Asus ROG Phone 5 ஸ்மார்ட்போன்.

Asus தனது புதிய கேமிங் ஸ்மார்ட்போன் ROG Phone 5 ஐ இந்த ஆண்டு தொடக்கத்தில் மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இப்போது Asus ROG Phone 5 Ultimate இந்தியாவில் முதன்முறையாக 18GB RAM மாறுபாட்டுடன் விற்பனைக்குக் கொண்டுவரப்பட உள்ளது. இந்த விற்பனை Flipkart இல் டிசம்பர் 26 அன்று மதியம் 12 மணிக்கு தொடங்கும். போனின் விலை ரூ.79,999 ஆக இருக்கும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்தியாவில் அசுஸ் ரோக் போன் 5 அல்டிமேட் 18 ஜி.பி. + 512 ஜி.பி. மாடல் விலை ரூ. 79,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் விற்பனை டிசம்பர் 26 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

ROG Phone 5

அசுஸ் நிறுவனம் தனது ரோக் போன் 5 மாடலை மார்ச் மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த கேமிங் ஸ்மார்ட்போனின் 18 ஜி.பி. ரேம் வேரியண்ட் அசுஸ் ரோக் போன் 5 அல்டிமேட் என அழைக்கப்படுகிறது. இதன் விற்பனை இதுவரை துவங்காமல் இருந்தது. தற்போது இதன் முதல் விற்பனை டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 5ஜி பிராசஸர், 18 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் 6.78 இன்ச் சாம்சங் அமோலெட் டிஸ்ப்ளே, 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது.

கனெக்டிவிட்டியை பொருத்தவரை அசுஸ் ரோக் போன் 5 அல்டிமேட் மாடலில் 5ஜி, 4ஜி எல்.டி.இ., வைபை, வைபை டைரக்ட், ப்ளூடூத் 5.2, யு.எஸ்.பி. டைப் சி போர்ட், ஹெட்போன் ஜாக் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile