புது அம்சங்களுடன் இருக்கும் 2020யில் வரும் ஐபோன்.

HIGHLIGHTS

ஆப்பிள் நிறுவனத்தின் 2021 ஐபோன் மாடலில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படலாம் என ஏற்கனவே தகவல் வெளியானது.

ஆப்பிள் நிறுவனத்தின் 2020 ஐபோன் சீரிஸ் பற்றிய புதிய விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய ஐபோன்களில் சிறிய நாட்ச் கொண்ட வடிவமைப்பு வழங்கப்படும் என்றும் 2021 மாடல்களில் நாட்ச் முழுமையாக நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் 2020 சீரிஸ் உயர் ரக மாடலில் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஐபோன் மாடல்களில் டிஸ்ப்ளே நாட்ச் இல்லாமல் மூன்று வடிவமைப்புகளுக்கு ஆப்பிள் காப்புரிமை கோரியிருப்பதாக கூறப்பட்டு இருந்தது.

மேலும் 2020 ஐபோனில் டச் ஐடி சென்சார் டிஸ்ப்ளேவின் கீழ் பொருத்தப்பட்டு, ஃபேஸ் ஐடி அம்சம் நீக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டிற்கான உயர் ரக ஐபோன் மாடலில் வழங்குவதற்கான ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவை இறுதி செய்யும் பணிகளில் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை வழங்கும் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் 2021 ஐபோன் மாடலில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படலாம் என ஏற்கனவே தகவல் வெளியானது. இத்துடன் இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் மொத்தம் மூன்று ஐபோன்களை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஃபுல் ஸ்கிரீன் ஐபோன் பற்றிய விவரங்களுடன், ஃபேஸ் ஐடி அம்சம் நிரந்தரமாக நீக்கப்பட்டு விடும் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஃபேஸ் ஐடி அம்சத்தை கொண்டு ஆப்பிள் நிறுவனம் பல்வேறு சேவைகளை உருவாக்கி இருப்பதோடு, இதற்கென அதிகளவு முதலீடுகளை செய்திருக்கிறது. அந்த வகையில் இந்த அம்சம் உண்மையில் நீக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :