iPhone பிரியர்களுக்கு மெகா ஜாக்பாட் ஆபர் ஒரே நேரத்தில் இந்த 3 போன்களின் விலை ரூ,15000 வரை அதிரடி குறைப்பு

Updated on 16-Jul-2025

Apple இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் iPhone 17 சீரிஸ் அறிமுகம் செய்வதற்க்கான தயார் செய்து வருகிறது, அதற்க்கு முன்னதாக அதன் இந்த iPhone 16 சீரிஸ் போனில் அதிரடி டிஸ்கவுண்ட் அறிவித்துள்ளது, நீங்கள் ஒரு ஐபோன் வாங்க நினைத்தால் இது சரியான வாய்ப்பாக இருக்கும் அதாவது சமிபத்தில் அறிமுகமான iPhone 16e , iPhone 16, iPhone 16 Plus இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் மற்றும் அமேசான் குறைந்த விலையில் வாங்கலாம்.

iPhone 16e ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் தகவல்

ஐபோன் 16e- யின் 128 ஜிபி ஸ்டோரேஜ் வகை அமேசானில் ரூ.50,999 க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது , அதே நேரத்தில் இது பிப்ரவரி 2025 யில் ரூ.59,900க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், HDFC பேங்க் கார்டை பயன்படுத்தி வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு இதன் விலை விலை ரூ.49,499 ஆக இருக்கும். இது தவிர, எக்ஸ்சேஞ்ச் சலுகையில் பழைய அல்லது ஏற்கனவே உள்ள தொலைபேசியைக் கொடுப்பதன் மூலம் கூடுதலாக ரூ.47,150 சேமிக்க முடியும். தற்போது, இந்த போன் வெளியீட்டு விலையின்படி சுமார் ரூ.10,401 குறைந்த விலையில் கிடைக்கிறது.

iPhone 16 ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் தகவல்.

iPhone 16 ஐபோன் 16 இன் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட், கடந்த ஆண்டு ரூ.79,900க்கு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இ-காமர்ஸ் பிளிப்கார்ட்டில் ரூ.69,999 க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . பேங்க் சலுகைகளைப் பற்றிப் பேசுகையில், Axis Bank கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ.4500 இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு இதன் விலை ரூ.65,499 ஆக இருக்கும். இந்த ஐபோன் அறிமுக விலையை விட ரூ.14,401 வரை குறைவாகக் கிடைக்கிறது. இது தவிர, பழைய அல்லது ஏற்கனவே உள்ள போனை எக்ஸ்சேஞ்ச் சலுகையாகக் கொடுப்பதன் மூலம் ரூ.46,150 கூடுதல் சேமிப்பு கிடைக்கும்.

இதையும் படிங்க Samsung யின் AI அம்சத்துடன் வரும் இந்த போனில் அதிரடி விலை குறைப்பு வெறும் ரூ,15,999க்கு வாங்கலாம்

iPhone 16 Plus விலை & சலுகைகள்

iPhone 16 Plus ஸ்மார்ட்போனின் 128 ஜிபி ஸ்டோரேஜ் வகை, இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் ரூ.79,999 க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது , அதே நேரத்தில் இது கடந்த ஆண்டு செப்டம்பரில் ரூ.89,900க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், Axis Bank கிரெடிட் கார்டு மூலம் ரூ.4500 தள்ளுபடி பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.75,499 ஆகும். உங்கள் பழைய அல்லது ஏற்கனவே உள்ள போனை எக்ஸ்சேஞ்ச் சலுகையில் கொடுத்து ரூ.59,500 சேமிக்கலாம். இந்த போன் அதன் அறிமுக விலையை விட ரூ.14,401 குறைவாக கிடைக்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :