iPhone இந்த மாடல் போனில் அதிரடியாக ரூ,10000 குறைப்பு இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதிங்க

Updated on 26-Feb-2025

Apple அதன் iPhone 16 Pro Max கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது, அதனை தொடர்ந்து இப்பொழுது iPhone 16 Pro Max அதிரடி டிஸ்கவுண்ட்வழங்கப்படுகிறது, அதாவது நீங்கள் iphone வாங்க நினைத்து ஆசைப்பட்டு காத்து கொண்டிருந்தால் இந்த விலை குறைப்பை பயன்படுத்தி அமேசானில் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதில் பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்குவதன் மூலம் இந்த போனை இன்னும் அகுரைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதன் ஆபர் தகவல் பற்றி பார்க்கலாமா வாங்க

iPhone 16 Pro Max விலை மற்றும் ஆபர்

iPhone 16 Pro Max யின் 256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை அமேசானில் 1,37,900ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இந்த போனை கடந்த ஆண்டு 1,44,900ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது, அதன் பிறகு பேங்க் ஆபர் பற்றி பேசினால் ICICI பேங்க் மூலம் 3000ரூபாய் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு நடைமுறை விலை ரூ.1,34,900 ஆக மாறும். வெளியீட்டு விலையிலிருந்து மொத்தம் ரூ.10,000 சேமிப்பை அடையலாம்.

iPhone 16 Pro Max

iPhone 16 Pro Max சிறப்பம்சம்.

ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 6.9-இன்ச் LTPO சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 1320×2868 பிக்சல்கள் ரேசளுசன் மற்றும் 2000 நிட்ஸ் வரை ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது. 16 ப்ரோ மேக்ஸ் ஆப்பிள் ஏ18 ப்ரோ (3nm), 6-கோர் ஜிபியு ப்ரோசெசர் கொண்டுள்ளது.

கேமரா செட்டிங் பற்றி பேசுகையில், 16 ப்ரோ மேக்ஸின் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் அகல கேமரா, 12 மெகாபிக்சல் பெரிஸ்கோப் கேமரா, 48 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 12 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. 16 ப்ரோ மேக்ஸ் பிரீமியம் டைட்டானியம் பிரேம் மற்றும் IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது, இது 6 மீட்டர் ஆழம் வரை நீரில் மூழ்கும்போது 30 நிமிடங்கள் வரை இந்த ஃபோனைத் தாங்க அனுமதிக்கிறது. இந்த ஐபோன் iOS 18 இயக்க முறைமையில் இயங்குகிறது.

இதையும் படிங்க:OnePlus யின் இந்த போனில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ,13,000 டிஸ்கவுண்ட் எந்த போன் எங்கு என பாருங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :