iPhone 16
நீங்கள் புதியதாக ஒரு iphone வாங்க நினைத்தால் iPhone 16 Plus மாடல் இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் ரூ,17,400 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இருப்பினும், இது போன்ற சலுகைகள் பொதுவாக நீண்ட காலம் நீடிக்காது. எனவே, நீங்கள் ஆர்வமாக இருந்தால், விரைவில் உங்கள் நடவடிக்கையை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 16 பிளஸ் ரூ.89,900 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அமேசான் தற்போது ஐபோன் 16 பிளஸில் ரூ.13,410 பிளாட் தள்ளுபடியை வழங்குகிறது, இதன் மூலம் அதன் விலை ரூ.76,490 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் நீங்கள் பேங்க் ஆபரின் மூலம் கூடுதாக ரூ.4,000 டிஸ்கவுண்ட் பெறலாம். அதன் பிறகு இதை வெறும்ரூ,72,49ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் மிக சிறந்த டிஸ்கவுன்டிற்கு உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம் இதை தவிர இந்த போனை நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம்.
இதையும் படிங்க:Oppo பிரியகளே புது போன் வாங்கும் ஐடியா இருந்தா வெயிட் பண்ணுங்க Dolby Vision சப்போர்டுடன் வருது புதிய போன்
ஆப்பிள் ஐபோன் 16 பிளஸ் 6.7 இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED ஸ்க்ரீனை வழங்குகிறது. இந்த போனை இயக்குவது ஆப்பிளின் A18 சிப்செட் ஆகும். மேலும், இந்த போன் அனைத்து ஆப்பிள் இன்டலிஜன்ஸ் அம்சங்களையும் சப்போர்ட் செய்கிறது மற்றும் IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி, ஐபோன் 16 பிளஸ் 27 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்குகிறது.
போட்டோ எடுப்பதற்காக, ஐபோன் 16 பிளஸ் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 48MP முதன்மை கேமரா மற்றும் 12MP அல்ட்ராவைடு லென்ஸ் உள்ளன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக இந்த போனில் முன்புறத்தில் 12MP கேமராவைக் கொண்டுள்ளது.