iphone 16
நாம் மிகவும் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த Apple யின் Awe-dropping event செப்டம்பர் 9 அறிமுகமாக இருக்கிறது, இதில் அதன் iPhone 17 சீரிஸ் அறிமுகம் செய்யும் குஷியில் அதன் கடந்த மாடல்களான iPhone 16 யில் அதிரடியாக ரூ,11,500 டிஸ்கவுண்ட் ஆமாங்க அதாவது Vijay Sales மூலம் பேங்க் ஆபர் போன்ற பல ஆபரின் குறைந்த விலையில் வாங்கலாம்
ஆப்பிள் ஐபோன் 16 இந்தியாவில் ரூ.79,900 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. விஜய் சேல்ஸின் வலைத்தளத்தில், இந்த முதன்மை போன் தற்போது ரூ.71,900க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது சில்லறை விற்பனையாளர் ஐபோன் 16 இல் ரூ.8,000 நிலையான தள்ளுபடியை வழங்குகிறது. மேலும், HDFC பேங்க் கிரெடிட்/டெபிட் கார்டு EMI பரிவர்த்தனைகளில் கூடுதலாக ரூ.3,500 தள்ளுபடியைப் பெறலாம்.
ஆப்பிள் ஐபோன் 16, போன் 6.1-இன்ச் OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. 60hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 2,000 nits ஹை ப்ரைட்னஸ் உடன்இந்த டிஸ்ப்ளே HDR மற்றும் True Tone ஐ சப்போர்ட் செய்கிறது , மேலும் பீங்கான் ஷீல்ட் கிளாஸ் பினிஷ் கொண்டுள்ளது.
இதையும் படிங்க:லாவா போல்ட் N1 5G : ரூ.7,000 பட்ஜெட்டில் 4K வீடியோ கேமராவுடன் அறிமுகம்!
இந்த போனில் A18 பயோனிக் சிப்செட் ப்ரோசெசர் கொண்டுள்ளது . மேலும், இந்த போன் ஆப்பிள் இன்டலிஜென்ஸ் அம்சங்களை சப்போர்ட் செய்கிறது . ஐபோன் 16 22 மணிநேரம் வரை பிளேபேக் நேரத்தை வழங்குவதாகவும், வயர்லெஸ் சார்ஜிங் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும், இது IP68 சர்டிபிகேஷன் பெற்றது.
கேமரா பற்றி பேசுகையில் ஆப்பிள் ஐபோன் 16 போனில் 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் 12MP மேக்ரோ லென்ஸுடன் கூடிய 48MP ஃப்யூஷன் சென்சார் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக இந்த போனின் முன்பக்கத்தில் 12MP கேமரா உள்ளது.