APPLE IPHONE 12 சீரிஸ் அக்டோபர் 13 அறிமுகமாகும்

HIGHLIGHTS

APPLE IPHONE 12  சீரிஸ்   அக்டோபர் 13 அறிமுகமாகும்

ஆப்பிள் நிறுவனம் அக்டோபர் 13 ஆம் தேதி நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்வு ஹை ஸ்பீடு என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் புதிய ஐபோன் 12 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதுதவிர பல்வேறு அக்சஸரீக்களும் அறிமுகமாகும் என தெரியவந்துள்ளது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

மூன்று மாடல்களும் 6.1 இன்ச், 6.7 இன்ச் மற்றும் 5.4 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் ப்ரோ மாடல்களில் LIDAR சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஐபோன்களில் ஆப்பிள் ஏ14 பயோனிக் சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இதுதவிர புதிய ஐபோன்களுடன் சார்ஜர் வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் புதிய ஐபோன்கள் மட்டுமின்றி ஏர்பாட்ஸ் ஸ்டூடியோ, ஹை எண்ட் ஒவர்-இயர் ஹெட்போன், ஏர்டேக்ஸ், சிறு டிராக்கிங் சாதனம், சிறிய ஹோம்பாட் மற்றும் புதிய மேக் உள்ளிட்டவையும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை வெளியான தகவல்களில் ஆப்பிள் நான்கு ஐபோன்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டது. எனினும், இம்முறை மூன்று ஐபோன்களே அறிமுகமாகும் என தெரிகிறது. இவை அனைத்திலும் OLED டிஸ்ப்ளே மற்றும் 5ஜி வசதி வழங்கப்பட இருக்கின்றன

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile