அழகிய ஸ்டைலிஷ் லுக்கில் AI+ Nova Flip 5G போன் அறிமுகம், விலை மற்றும் அம்சங்கள் பாருங்க

HIGHLIGHTS

Ai+ Nova இன்று அதன் புதிய Ai+ Nova Flip போனை அறிமுகம் செய்தது,

இந்த போனில் 6.9 இன்ச் இன்னார் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 3.1 இன்ச் AMOLED கவர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது

இந்த போனின் விலை அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Ai+ Nova இன்று அதன் புதிய Ai+ Nova Flip போனை அறிமுகம் செய்தது, இந்த போன் பிலிப் மாடலில் கொண்டு வரப்பட்டது, இந்த போனில் 6.9 இன்ச் இன்னார் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 3.1 இன்ச் AMOLED கவர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது இதை தவிர இந்த போன் ஒரு புது விதமான ஸ்டைலிஷ் லுக் தருகிறது மேலும் இந்த போனின் விலை அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Ai+ Nova Flip விலை தகவல்

விலையை பற்றி பேசினால் Ai+ Nova Flip-இன் 8GB/256GB சேமிப்புத் திறன் கொண்ட மாடல் ₹29,999 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஃபோனின் விற்பனை மே 2026-இல் தொடங்கும். இந்த ஃபோன் கிளேசியர் ஒயிட் (பேண்டோன் கிளவுட் டான்சர்) வண்ணத்தில் வருகிறது. இது ஃபிளிப்கார்ட் என்ற இ-காமர்ஸ் தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

Ai+ Nova Flip சிறப்பம்சம்.

AI+ Nova Flip 5G போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.9-இன்ச் AMOLED இன்னார் டிஸ்ப்ளே உடன் இதில் 2790 x 1188 பிக்சல் ரேசளுசன் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் 120Hz ரெப்ரஸ் ரேட் பிக்சல் டென்சிட்டி உடன் இதில் 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது, இதனுடன் இந்த போனின் பேனலில் 2160Hz PWM டிம்மிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது மற்றும் இதன் கவர் டிஸ்ப்ளே 3.1-இன்ச் AMOLED கவர் டிஸ்ப்ளே உடன் வருகிறது .

மேலும் Ai+ Nova Flip போனில் மிக சிறந்த பர்போமன்சுக்கு MediaTek Dimensity 7300 சிப்செட் உடன் 8GB யின் LPDDR4X RAM மற்றும் 256GB of uMCP 2.2 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் அவுட் ஆப் தி பாக்ஸ் Android 15 உடன் NxtQ OS மேல் இருக்கிறது.

இதையும் படிங்க ஜாக் பாட் ஆபர் iQOO யின் இந்த மாடலுக்கு ஒரே அடியாக ரூ,6000 பேங்க் டிஸ்கவுண்ட்

மிக சிறந்த கேமரா அம்சங்களுக்கு இதில் 50மெகாபிக்சல் மெயின் கேமராவுடன் இது 10x டிஜிட்டல் சப்போர்ட் வழங்கப்படுகிறது மற்றும் இதில் 2-மேகபிக்சல் டெப்த் சென்சார் உடன் மிக சிறந்த போர்ட்ரைட் போட்டோ ஷாட் எடுக்க முடியும், இதை தவிர இப்பொழுது செல்பிக்கு 32 மெகாபிக்சல் கேமராவுடன் மிக சிறந்த செல்பி கேமரா எடுக்க முடியும்.

AI+ நோவா ஃபிளிப் 5G, 4,325mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 33W வயர்டு சார்ஜிங், PD3.0 மற்றும் PPS தரநிலைகளுக்கான ஆதரவுடன் வருகிறது. கனெக்ஷன் விருப்பங்களில் இரட்டை 5G சிம் சப்போர்ட், புளூடூத், NFC, OTG, L1 மற்றும் L5 பேண்டுகளுடன் கூடிய GPS மற்றும் ஒரு USB டைப்-C போர்ட் ஆகியவை அடங்கும். இதில் உள்ள சென்சார்களில் ஹால் சென்சார், கைரோஸ்கோப் மற்றும் பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் ஆகியவை அடங்கும். இந்த கைபேசி மடிக்கப்பட்ட நிலையில் 7.2 மிமீ தடிமன் கொண்டது மற்றும் 193 கிராம் எடை கொண்டது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :