இனி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இயங்காது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மிக பெரிய அறிவிப்பு.

HIGHLIGHTS

27 ஆண்டுகளாக இன்டர்நெட் சேவை வழங்கி வந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் ஆதரவை இழந்து வந்தது.

இனி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்பாட்டுக்கு இல்லை கூறியுள்ளது. இந்த ஆண்டு ஜூன் 15 (இன்று ) முதல் முழுமையாக இந்த சேவை நிறுத்தப்படுகிறது.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் படிப்படியாக பல்வேறு அப்டேட்களையும் கண்டது. கடைசியாக கடந்த 2013ம் ஆண்டில் இதன் 11-வது வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்ட

இனி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்  இயங்காது  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மிக பெரிய அறிவிப்பு.

27 ஆண்டுகளாக இன்டர்நெட் சேவை வழங்கி வந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் ஆதரவை இழந்து வந்தது. கூகுள் மற்றும் பயர்பாக்ஸ் உள்ளிட்ட பிரவுசர்களின் வளர்ச்சிக்குப் பிறகு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படவில்லை. 25 ஆண்டுகளுக்கும் மேலாக பிரவுசர் சேவையில் இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனம், தற்போது தங்களின் இணைய சேவைக்கான ஆதரவை நிறுத்தப்போவதாக, இனி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்பாட்டுக்கு இல்லை கூறியுள்ளது. இந்த ஆண்டு ஜூன் 15 (இன்று )  முதல் முழுமையாக இந்த சேவை நிறுத்தப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதையடுத்து இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் படிப்படியாக பல்வேறு அப்டேட்களையும் கண்டது. கடைசியாக கடந்த 2013ம் ஆண்டில் இதன் 11-வது வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு விண்டோஸ் 10 வருகையின் காரணாமாக கடந்த 2015-ம் ஆண்டு வாக்கில் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் என்கிற புதிய பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டது.

அப்போதே இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் அடுத்த வெர்ஷனுக்கான அப்டேட்டையும் அந்நிறுவனம் நிறுத்திக் கொண்டது. படிப்படியாக எட்ஜ் பிரவுசரை பயனர்கள் மத்தியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், விண்டோஸ் 11-ன் ஸ்டார்ட் மெனுவில் இருந்து இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை தூக்கியிருந்தது.

இந்நிலையில் தற்போது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் விடைபெற உள்ளது. சுமார் 27 ஆண்டுகளாக கம்பியூட்டர் உலகில் ஒரு அங்கமாக இருந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் நாளையுடன் விடைபெற உள்ளது அதன் பயனர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்துள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile