லெனோவோ நிறுவனத்தின் டேப் பி11 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த மாடல் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய லெனோவோ டேப் பி11 மாடலில் 11 இன்ச் WUXGA+ 2K டச் ஸ்க்ரீன் வசதி கொண்ட IPS ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.
– 11 இன்ச் 2000×1200 பிக்சல் IPS LCD ஸ்கிரீன்
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
– அட்ரினோ 610 GPU
– 4 ஜிபி LPDDR4 ரேம்
– 128 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 10
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ்
– 8 எம்பி செல்பி கேமரா
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ
– குவாட் ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
– 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத் 5.1
– யு.எஸ்.பி. டைப் சி
– 7500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 20 வாட் பாஸ்ட் சார்ஜிங்
மேலும் புதிய லெனோவோ டேப்லெட் மாடலில் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 4 ஜிபி ரேம், 8 எம்பி செல்பி கேமரா, 13 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிலாஷ், குவாட் ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ் வசதி மற்றும் 12 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் பேட்டரி உள்ளது.
லெனோவோ டேப் பி11 மாடல் பிளாட்டினம் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.24,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய லெனோவோ டேப்லெட் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.