Xiaomi யின் மிக மெல்லிய லேப்டாப்பான Xiaomi book Air OLED டிஸ்பிளேயுடன் அறிமுகம்.

HIGHLIGHTS

சியோமி நிறுவனம் சியோமி புக் ஏர் 13 மாடலையும் அறிமுகம் செய்து இருக்கிறது.

புதிய ரெட்மி டிவி, ரெட்மி ப்ரோஜெக்டர், எலெக்ட்ரிக் ஹீட்டர் போன்ற சாதனங்களையும் சியோமி அறிமுகம் செய்தது.

புதிய சியோமி புக் ஏர் 13 மாடல் சியோமி இதுவரை அறிமுகம் செய்ததில் மிகவும் மெல்லியதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

Xiaomi யின் மிக மெல்லிய லேப்டாப்பான Xiaomi book Air OLED டிஸ்பிளேயுடன் அறிமுகம்.

ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் சியோமி நிறுவனம் சியோமி புக் ஏர் 13 மாடலையும் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சியோமி லேப்டாப், ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி புதிய ரெட்மி டிவி, ரெட்மி ப்ரோஜெக்டர், எலெக்ட்ரிக் ஹீட்டர் போன்ற சாதனங்களையும் சியோமி அறிமுகம் செய்தது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

புதிய சியோமி புக் ஏர் 13 மாடல் சியோமி இதுவரை அறிமுகம் செய்ததில் மிகவும் மெல்லியதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. சியோமி புக் ஏர் 13 மாடலில் 13.3 இன்ச் 2880×1800 பிக்சல் E4 OLED டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட், டால்பி விஷன், VESA டிஸ்ப்ளே HDR500 சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் 2-இன்-1 டிசைன் மற்றும் 360 டிகிரி ஹின்ஜ், டச் சப்போர்ட் உள்ளது.

இதனால் புதிய சியோமி புக் ஏர் 13 மாடலை பல்வேறு விதங்களில் பயன்படுத்த முடியும். இந்த லேப்டாப்பில் 6-சீரிஸ் அலுமினியம் அலாய், CNC கார்விங் வழிமுறை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த எடை மற்றும் அளவு முறையே 1.2 கிலோ மற்றும் 12mm ஆகும்.

மேலும் இதில் 58.3 வாட் ஹவர் பேட்டரி மற்றும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. புதிய சியோமி புக் ஏர் 13 மாடல் விண்டோஸ் 11 ஒஎஸ், வைபை 6E, ப்ளூடூத் 5.2, இரண்டு தண்டர்போல்ட் 4 போர்ட்கள், ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த லேப்டாப்பில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி, டூயல் யூனிட் மைக்ரோபோன்கள், பேக்லிட் கீபோர்டு, கிளாஸ் டச்பேட், பவர் பட்டனில் கைரேகை சென்சார், 8MP கேமரா, 12th Gen இண்டெல் கோர் ஐ7 பிராசஸர், இண்டெல் ஐரிஸ் Xe GPU, அதிகபட்சம் 16 ஜிபி LPDDR5 ரேம், 512 ஜிபி SSD ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo