கியா இந்தியா பிராண்டின் முதல் EV, EV6 ஐ ஜூன் 2 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. கார் தயாரிப்பாளர் இப்போது ரூ. 3 லட்சம் டோக்கன் தொகையுடன் முன்பதிவுகளை எடுக்கத் தொடங்கியுள்ளார், அதாவது விரைவில் வெளியிடப்பட உள்ள இந்த காரை ரூ.3 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்யலாம். நாட்டின் 12 நகரங்களில் உள்ள 15 டீலர்ஷிப்கள் மூலம் Kia EV6 விற்பனை செய்யப்பட உள்ளது.
Survey
✅ Thank you for completing the survey!
கியா EV6 மாடலில் 77.4 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட இருக்கிறது. சர்வதேச சந்தையில் இந்த கார் 58 கிலோவாட் ஹவர் மற்றும் 77.4 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், இந்தியாவில் ஒரு வேரியண்ட் மட்டுமே அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் மணிக்கு 425 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. மேலும் இந்த கார் 320 ஹெச்.பி. பவர், 605 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இந்திய சந்தையில் புதிய கியா EV6 மாடலின் விலை ரூ. 50 முதல் ரூ. 60 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த காரின் 100 யூனிட்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட இருக்கின்றன. கியா EV6 மாடல் RWD மற்றும் AWD என இரண்டு வேரியண்ட்களிலும் கிடைக்கும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.View Full Profile