விக்ரம் இன்று முதல் DISNEY Hostar OTT தளத்தில் பார்த்து மகிழுங்கள்.

HIGHLIGHTS

சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் விக்ரம் திரைப்படம்,

விக்ரம் திரைப்படம், உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது

இந்திய நேரப்படி ஜூலை 8நள்ளிரவு 12 மணிக்கு ஓடிடி தளத்தில் வெளியாகியது

விக்ரம் இன்று முதல் DISNEY Hostar OTT  தளத்தில் பார்த்து மகிழுங்கள்.

சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் விக்ரம் திரைப்படம், இந்திய நேரப்படி ஜூலை 8நள்ளிரவு 12 மணிக்கு ஓடிடி தளத்தில் வெளியாகியது . இதனைப் பார்க்க செய்ய வேண்டியது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

கடந்த மாதம் 3ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம், உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி ஒரு மாதம் கடந்த நிலையிலும், பல்வேறு திரையரங்குகளில் இன்றளவும் விக்ரம் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இன்றைய நிலவரப்படி விக்ரம் திரைப்படம் ரூ. 442 கோடியை உலகம் முழுவதும் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விக்ரம் படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம் மிகப் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது.

சுமார் 120 கோடி ரூபாய் கொடுத்து விக்ரம் படத்தை ஓடிடி தளம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் விக்ரம் திரைப்படம் ஜூலை 8 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில், விக்ரம் படத்தை பார்க்க வேண்டுமென்றால் அதற்கு முதலில் சப்ஸ்கிரிப்ஷன் செய்திருக்க வேண்டும். அந்த வகையில் மூன்று ப்ளான்களை ஹாட்ஸ்டார் தளம் அளித்துள்ளது.

ரூ. 499 ப்ளானில், மொபைல் போனில் மட்டும் ஓடிடி தளத்தை காணலாம். ஸ்டாண்டர்டு HD தரத்தில் விக்ரம் உள்பட தளத்தின் மற்ற படங்கள், நாடகங்கள், வெப் சீரிஸ் உள்ளிட்டவைகளை பார்க்கலாம். இந்த பிளானில் விளம்பரங்கள் தோன்றும். ஒரு டிவைசிற்கு மட்டுமே அனுமதி.

ரூ. 899 ப்ளானில் முழு HD தரத்தில் 2 டிவைஸ்கள் வரை கண்டு மகிழலாம். ரூபாய் 1,499 ப்ளானில் விளம்பரங்கள் இல்லாத 4K தரத்தில் ஓடிடி தள சேவையை பெறலாம். இந்த பிளான்கள் அனைத்தும் ஓராண்டிற்கு உரியவை

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile