மார்ச் மாதம் 24-ந்தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே ஒன்றரை மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் நாளை முதல் ரெயில் போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று மாலை 4 மணிக்கு ஐஆர்சிடிசி இணையதள பக்கத்தில் தொடங்கப்பட்டது. ஆனால், லட்சக்கணக்கான மக்கள் இந்திய ரெயில்வேயின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் குவிந்ததால் ஐஆர்சிடிசி பக்கமே முடங்கியது.
மொத்தம் 30 ரெயில்கள் மட்டும் 20-ந்தேதி வரை இயக்குவதற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. நாளை முதல் ரெயில் ஓடத் தொடங்கும். நாடு முழுவதும் 15 முக்கிய ரெயில் நிலையங்களுக்கு இடையே மட்டுமே இந்த ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இதையடுத்து உடனடியாக ரெயில் டிக்கெட் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.மேலும் மீண்டும் IRCTC தளம் முடக்கப்பட்டுள்ளது