நீங்க ஆஃப்லைனில் இருக்கும்போது ஈமெயில் எப்படி அனுப்ப பெற முடியும்.

HIGHLIGHTS

உலகில் மிக பிரபலமான இ-மெயில் சேவை நிறுவனம் ஜிமெயில் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை

உலகெங்கிலும் 1.8 பில்லியன் மக்கள் ஜிமெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

கூகுள் இமெயில் சேவையானது 18 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது.

நீங்க ஆஃப்லைனில்  இருக்கும்போது  ஈமெயில்  எப்படி அனுப்ப பெற முடியும்.

உலகில் மிக பிரபலமான இ-மெயில் சேவை நிறுவனம் ஜிமெயில் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கடந்த ஆண்டின் நிலவரப்படி உலகெங்கிலும் 1.8 பில்லியன் மக்கள் ஜிமெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இமெயில் வாடிக்கையாளர்களின் மார்க்கெட் பங்குகளில் கூகுள் இமெயில் சேவையானது 18 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

மக்களில் சுமார் 75 சதவீதம் பேருடைய மொபைல் ஃபோன்களில் ஜிமெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதையெல்லாம் மனதில் வைத்து, வாடிக்கையாளர்களின் சௌகரியம் கருதி ஆஃப்லைன் ஜிமெயில் சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இன்றைக்கும் கூட இன்டர்நெட் வசதி இல்லாத கிராமப்புற பகுதிகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு நீங்கள் செல்லும்போது இந்த ஆஃப்லைன் சேவை உங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று கூகுள் நிறுவனம் தெரிவிக்கிறது.

உங்கள் டிவைஸில் நீங்கள் கூகுள் எனேபிள் செய்து கொள்வது எப்படி?

1. உங்கள் டிவைஸில் mail.google.com என்ற தளத்திற்கு செல்லவும். ஆஃப்லைன் ஜிமெயில் சேவை என்பது கூகுள் குரோம் பிரவுஸரில் மட்டுமே வேலை செய்யும் என்றும், அது நீங்கள் நார்மல் மோடில் பிரவுஸிங் செய்ய வேண்டும் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவிக்கிறது. பிரைவேட் பிரவுசிங் மற்றும் இதர நிறுவன பிரவுசர்களில் ஆஃப்லைன் சேவை வேலை செய்யாது.

2. உங்கள் இன்பாக்ஸ் சென்ற பிறகு செட்டிங்க்ஸ் சென்று கோக்வீல் பட்டனை (Cogwheel button) அழுத்தவும்.

3. இப்போது ஆல் செட்டிங்க்ஸ் பார்ப்பதற்கான பட்டனை கிளிக் செய்யவும்.

4. இந்தப் பக்கத்தில் ஆஃப்லைன் என்ற டேப் மீது கிளிக் செய்யவும்.

5. இங்கு எனேபிள் ஆஃப்லைன் இன்பாக்ஸ் என்ற ஆப்ஷன் மீது கிளிக் செய்யவும்.

6. இப்போது எத்தனை நாட்களுக்கான மெசேஜ்களை சின்கரனைஸ் (sync) செய்வது என்பதை தேர்வு செய்து கொள்ளலாம்.

7. இப்போது உங்கள் கம்ப்யூட்டரில் எவ்வளவு ஸ்பேஸ் இருக்கிறது என்பதை கூகுள் காண்பிக்கும். இதைத் தொடர்ந்து எவ்வளவு டேட்டாவை நீங்கள் ஆஃப்லைனில் சேமிப்பது என்பதை தேர்வு செய்யலாம் அல்லது ஆஃப்லைனில் ஏற்கனவே உள்ள டேட்டாவை நீக்கலாம்.

8. ஆஃப்லைன் டேட்டாவை தொடர்ந்து வைத்துக் கொள்வது அல்லது நீக்குவது என்ற ஆப்ஷனை நீங்கள் தேர்வு செய்த பிறகு, சேவ் சேஞ்சஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரில் ஆஃப்லைன் ஜிமெயில் சேவை ஆக்டிவே

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile