ஆதரில் புதிய மொபைல் நம்பரை மாற்றுவது எப்படி ?

HIGHLIGHTS

ஆதரில் இருக்கும் மொபைல் நம்பரை ஏதோ ஒரு காரணத்தால் மாற்றப்படுகிறது

ஆதார் அட்டையுடன் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு உறுதிப்படுத்தல் செய்தி அனுப்பப்படுகிறது.

, உங்கள் மொபைல் எண்ணை UIDAI (இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம்) டேட்டாபேஸில் அப்டேட் செய்வது அவசியம்.

ஆதரில்  புதிய மொபைல் நம்பரை மாற்றுவது எப்படி ?

உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து, வருமான வரி ரிட்டர்ன்ஸ் வரை பல அரசு திட்டங்கள் என இப்போது அனைத்தும் ஆதாருடன் இணைக்கப்பட்டு விட்டன. உங்கள் ஆதாரை நிதி சேவைகளுடன் இணைப்பதன் மூலம் அரசு வழங்கும் வெவ்வேறு மானியங்களைப் பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பெறலாம். நாட்டில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ள அடையாள சான்றுகளில் தற்போது ஆதார் முக்கியமான ஒன்றாகும். ஒரு புதிய பேங்க் அக்கவுண்ட் ஓபன் செய்ய, புதிய சிம் கார்டை வாங்க அல்லது கோவிட்-19 தடுப்பூசி மற்றும் பரிசோதனைகளைச் செய்ய என இந்திய குடிமக்கள் தங்கள் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

மேலும் ஆதரில் இருக்கும் மொபைல் நம்பரை ஏதோ ஒரு காரணத்தால்  மாற்றப்படுகிறது, ஆனால்  அதே சமயத்தில்  ஆதார் அட்டையுடன் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு உறுதிப்படுத்தல் செய்தி அனுப்பப்படுகிறது. உங்கள் மொபைல் எண் ஆதாரில் பதிவு செய்யப்படாவிட்டால், நீங்கள் அத்தகைய மெசேஜை பெற மாட்டீர்கள் மற்றும் நீங்கள் பெற தகுதியான எந்த ஒரு அரசு நன்மைகளையும் நீங்கள் பெறுவதில் தடை ஏற்படும். அதே போல தற்போது அரசு மற்றும் பல நிறுவனங்கள் வழங்கும் பல ஆன்லைன் சேவைகளுக்கு OTP மூலம் ஆதார் அட்டை சரிபார்ப்பு தேவைப்படுகிறது. இந்த சேவைகளை நீங்கள் பெற வேண்டுமானால், உங்கள் மொபைல் எண்ணை UIDAI (இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம்) டேட்டாபேஸில் அப்டேட் செய்வது அவசியம்.

உங்களுடைய மொபைல் நம்பரை மாற்ற விரும்பினாலோ அல்லது உங்கள் மொபைல் நம்பர் செயலிழந்து போனாலோ, நீங்கள் ஆதார் அட்டையிலும் புதிய மொபைல் நம்பரைச் சேர்க்க வேண்டும்.

ஆதார் அட்டையில் புதிய மொபைல் நம்பரைச் சேர்ப்பது எப்படி?

உங்களது ஆதார் கார்டில் உங்களது மொபைல் எண்ணை நீங்கள் பதிவு செய்யவில்லை என்றாலோ அல்லது ஆதாரில் இருக்கும் தற்போதைய மொபைல் எண்ணுக்குப் பதிலாக நீங்கள் உங்களது வேறு எண்ணை மாற்ற விரும்பினால் அருகிலுள்ள ஆதார் மையத்திற்குச் செல்வதன் மூலம் அதை எளிதாகச் செய்யலாம்.

ஸ்டெப் 1: நீங்கள் வசிக்கும் இடத்திற்கு உள்ள ஆதார் என்ரோல்மென்ட் மையத்துக்கு செல்லுங்கள்

ஸ்டெப் 2: ஆதார் அலுவகலத்தில் இருந்து ஆதார் திருத்தம் / புதுப்பிப்பு படிவத்தைப் பெற்று நிரப்புங்கள்

ஸ்டெப் 3: சேவை மையத்தில் பணியாற்றும் நபரிடம் நிரப்பிய படிவத்தைச் சமர்ப்பிக்கவும்

ஸ்டெப் 4: ஆதார் திருத்தத்திற்கு ரூ.50 கட்டணம் செலுத்திட வேண்டும்

ஸ்டெப் 5: Update Request Number என்ற ஒரு எண் வழங்கப்படும். இந்த எண்ணைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் மொபைல் எண் ஸ்டேட்டஸ் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்டெப் 6: நீங்கள் விண்ணப்பப் படிவம் சமர்ப்பித்த 90 நாட்களுக்குள் உங்களுக்கு ஆதார் எண்ணுடன் புதிய மொபைல் எண் அப்டேட் செய்யப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

ஆதார் மையத்துக்கு செல்ல முடியவில்லை என்றால், நீங்கள் ஆன்லைனிலேயே ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஸ்டெப் 1: உங்களுடைய டெலிகாம் சேவை வழங்குனரின் வலைதளத்துக்குச் செல்லுங்கள்

ஸ்டெப் 2: மொபைல் நம்பரை அப்டேட் செய்யும் பிரிவுக்குச் சென்று, ஆதார் அட்டை ‘tab’ மீது கிளிக் செய்து, நீங்கள் ஆதாருடன் இணைக்க வேண்டிய மொபைல் எண்ணை உள்ளிடவும்.

ஸ்டெப் 3: நீங்கள் உள்ளிட்ட மொபைல் எண்ணுக்கு உங்களுக்கு OTP அனுப்பப்படும்.

ஸ்டெப் 4: உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும்

ஸ்டெப் 5: OTP உறுதிப்படுத்தல் செய்தி உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்

ஸ்டெப் 6: அடுத்ததாக, e-KYC பற்றி உங்கள் மொபைல் சேவை வாங்குபவரின் இருந்து செய்தி அனுப்பப்படும்.

ஸ்டெப் 7: அதில் உள்ள நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை ஏற்றுக்கொண்ட பிறகு, உங்களுக்கு மீண்டும் அனுப்பப்படும் ஒரு OTP யை உள்ளிடவும். உங்கள் ஆதார் நம்பருடன் புதிய மொபைல் எண் இணைக்கப்பட்டிருக்கும்.

உங்கள் தற்போதைய மொபைல் எண்ணை உங்கள் ஆதார் அட்டையுடன் ஆன்லைனில் புதுப்பிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். உங்கள் அருகிலுள்ள ஆதார் அட்டை அலுவலகம் அல்லது பதிவு மையத்திற்குச் சென்று, திருத்தம் செய்ய விண்ணப்பிக்க வேண்டும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile