ஆதார் கார்டில் எத்தனை மொபைல் நம்பர் ரெஜிஸ்டர் ஆகி இருக்கு.உடனே செக் செய்யுங்க

HIGHLIGHTS

ஆதார் மோசடிகளை தவிர்க்க புதிய வெப்சைட்

இந்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) சமீபத்தில் ஒரு இணையதளத்தை (web portal) அறிமுகப்படுத்தியது

வெறும் 2 நிமிடங்களில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ள மொபைல் எண்களை செக் செய்து கொள்ளலாம்

ஆதார் கார்டில் எத்தனை மொபைல் நம்பர் ரெஜிஸ்டர் ஆகி இருக்கு.உடனே செக் செய்யுங்க

இந்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) சமீபத்தில் ஒரு இணையதளத்தை (web portal) அறிமுகப்படுத்தியது, இது பயனர்கள் தங்கள் பெயர்களில் வழங்கப்பட்ட மொபைல் இணைப்புகளைச் சரிபார்க்க அனுமதிக்கிறது. இன்னும் விளக்கமாக சொல்லவேண்டும் என்றால், மோசடி மேலாண்மை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக்கான தொலைத்தொடர்பு பகுப்பாய்வு (Telecom Analytics for Fraud Management and Consumer Protection – TAFCOP) என பெயரிடப்பட்ட இந்த போர்ட்டல் வழியாக பயனர்கள் தங்கள் ஆதார் அட்டையுடன் ரிஜிஸ்டர் செய்த மொபைல் எண்களின் பட்டியலை அணுகலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஆதார் உடன் ரிஜிஸ்டர் ஆகியுள்ள மொபைல் நம்பர்களின் லிஸ்ட்டை வைத்து என்ன செய்வது?

இந்த போர்ட்டலைப் பயன்படுத்தி, குடிமக்கள் தங்களுக்கு சொந்தமில்லாத அல்லது இனி பயன்பாட்டில் இல்லாத மொபைல் எண்களை பற்றி ரிப்போர்ட் செய்யலாம்; பிளாக் செய்யலாம்.

"இந்த இணையதளம் சந்தாதாரர்கள் தங்கள் பெயரில் வேலை செய்யும் மொபைல் இணைப்புகளின் எண்ணிக்கையை சரிபார்க்க உதவுவதற்காக உருவாக்கப்பட்டது, மேலும் இது அவர்களுக்காகன கூடுதல் மொபைல் இணைப்புகள் ஏதேனும் இருந்தால் அவற்றை முறைப்படுத்த தேவையான நடவடிக்கையையும் எடுக்கும்" என்று TAFCOP வலைத்தளத்தின் About Page விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வெப் போர்டல் வழியாக, உங்கள் ஆதார் நம்பருடன் "தொடர்பு" இல்லாத, ஆனால் அதனுடன் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை சரிபார்த்து, அது சார்ந்த உரிய நடவடிக்கை எடுப்பது எப்படி என்கிற

எளிமையான மற்றும் படிப்படியான வழிமுறைகள் இதோ:

1. TAFCOP வெப்சைட்டிற்கு செல்லவும், அல்லது https://tafcop.dgtelecom.gov.in/ என்கிற இணைப்பை பயண்படுத்திக் கொள்ளவும்.

TAFCOP Website

2. அங்கே உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு, OTP-க்கான கோரிக்கையை கிளிக் செய்யவும்

3. உங்கள் லாக் இன்-ஐ சரிபார்க்க OTP உடன் ஒரு குறுஞ்செய்தியை DoT உங்களுக்கு அனுப்பும்

TAFCOP OTP

4. குறிப்பிட்ட OTP-ஐ உள்ளிடவும்

5. தற்போது, உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட அனைத்து மொபைல் எண்களின் பட்டியலையும் இந்த வெப் போர்டல் காண்பிக்கும். பயனர்கள் பயன்பாட்டில் இல்லாத எண்களைப் புகாரளிக்கலாம் மற்றும் பிளாக் செய்யலாம்.

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile