ஐபோன் மற்றும் ஐபேட் பயன்படுத்துவோரா ? உடனே இதை செய்யுங்க.

HIGHLIGHTS

ஐபோன் மற்றும் ஐபேட் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது

புதிய அப்டேட்களும் பெரும் பிழை திருத்தங்களுடன் கடந்த வாரம் வெளியிடப்பட்டன

இந்திய பயனர்கள் உடனடியாக செக்யூரிட்டி பேட்ச் இன்ஸ்டால் செய்ய CERT-In அறிவுறுத்தி இருக்கிறது.

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு அமைப்பான CERT-In ஐபோன் மற்றும் ஐபேட் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இரு சாதனங்களை பயன்படுத்துவோர் உடனடியாக iOS 14.7.1 மற்றும் iPadOS 14.7.1 வெர்ஷனை அப்டேட் செய்ய CERT-In கேட்டுக்கொண்டுள்ளது.

இரு புதிய அப்டேட்களும் பெரும் பிழை திருத்தங்களுடன் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. தற்போது கண்டறியப்பட்டு இருக்கும் மெமரி கரப்ஷன் ஐபோன் 6எஸ் மற்றும் அதன்பின் வெளியான ஐபோன் மாடல்கள், ஐபேட் ப்ரோ, ஐபேட் ஏர் 2 மற்றும் 5th Gen ஐபேட், ஐபேட் மினி 4 மற்றும் அதன்பின் வெளியான சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மெமரி கரப்ஷன் பிழையை கொண்டு ஹேக்கர் பயனரின் சாதனத்தை இயக்க முடியும். ஆப்பிள் நிறுவனத்தின் ஐஒஎஸ் மற்றும் ஐபேட் ஒஎஸ்-இன் IOMobileFrameBuffer-இல் இந்த பிழை ஏற்பட்டுள்ளது. இந்த பிழை வேகமாக பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், இந்திய பயனர்கள் உடனடியாக செக்யூரிட்டி பேட்ச் இன்ஸ்டால் செய்ய CERT-In அறிவுறுத்தி இருக்கிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :