Google Account யின் லொகின் புதிய விமுறையை நவம்பர் 9 தேதி அமலுக்கு வருகிறது.

HIGHLIGHTS

நவம்பர் 9 முதல் கூகுள் அக்கவுண்டில் டோர் ஸ்டெப் வெரிஃபிகேசன் கட்டாயமாக்கப்படும்

பயனர்கள் விரும்பினால், இந்த அம்சத்தை கைமுறையாகவும் செயல்படுத்தலாம்.

கூகுள் 150 மில்லியன் பயனர்களை இரண்டு-படி அங்கீகார சேவையின் கீழ் கொண்டுவர விரும்புகிறது

Google Account யின் லொகின் புதிய விமுறையை நவம்பர் 9 தேதி அமலுக்கு வருகிறது.

கூகுள் நிறுவனம் 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறையை இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு கொண்டுவரப் போவதாக மே மாத வாக்கில் அறிவித்து இருந்தது. அதன்படி இந்த வழிமுறை நவம்பர் 9 ஆம் தேதி அமலுக்கு வருகிறது.
 
இதனை செயல்படுத்திய பின், பயனர் ஒவ்வொரு முறை கூகுள் கணக்கில் லாக்-இன் செய்யும் போதும் குறுந்தகவல் அல்லது மின்னஞ்சலில் ஒருமுறை பயன்படுபத்தக்கூடிய கடவுச்சொல் (ஓ.டி.பி.) வரும். இதனை பதிவிட்டால் தான் கணக்கில் நுழைய முடியும். இந்த வழிமுறை பயனர் கணக்குகளை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

 கூகுள் 2-ஸ்டெப் வெரிபிகேஷன் 

நவம்பர் 9 ஆம் தேதி முதல் 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறை பயனரின் கூகுள் அக்கவுண்டில் தானாக அமல்படுத்தப்பட்டு விடும் என பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கூகுள் நிறுவனம் தெரியப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 150 மில்லியன் கூகுள் பயனர்களின் அக்கவுண்ட்களுக்கு 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூகுள் அறிவித்து இருக்கிறது

சில பயனர்களின் கணக்குகள் ஏற்கனவே பாதுகாக்கப்பட்டுள்ளன

சில நாட்களுக்கு முன்பு, கூகுளின் வலைப்பதிவு இடுகையில் கூகுள் 150 மில்லியன் பயனர்களை இரண்டு-படி அங்கீகார சேவையின் கீழ் கொண்டு வர விரும்புகிறது. 2 மில்லியன் யூடியூப் பயனர்களை இந்த செயல்பாட்டில் பங்கேற்க வைக்கும் திட்டமும் உள்ளது.
 
இதுவரை, இரண்டு-படி சரிபார்ப்பு அம்சம் அனைத்து பயனர்களுக்கும் கட்டாயமாக்கப்படவில்லை. குறிப்பிட்ட வகை பயனர்களுக்கு இந்த அம்சத்திற்கான அணுகல் தானியங்கு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பயனர்கள் தங்கள் Google கணக்கு அமைப்புகளில் இருந்து இந்த பாதுகாப்பு அம்சத்தை கைமுறையாக செயல்படுத்தலாம்

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile