ஜிமெயில் செயலி ஆயிரம் கோடி டவுன்லோட்களை கடந்து சாதனை.
புதிய மைல்கல்லை எட்டிய கூகுள் ஜிமெயில்
அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் 4ஆவது இடம்
கூகுள் பிளே ஸ்டோர், யூடியூப் மற்றும் கூகுள் மேப்ஸ் போன்ற செயலிகள் ஆயிரம் கோடி டவுன்லோட்களை கடந்தது.
கூகுள் ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோரில், ஜிமெயில் செயலி ஆயிரம் கோடி பதிவிறக்கங்களைக் கடந்துள்ளது. பதிவிறக்கங்களில் இத்தகைய மைல்கல் எட்டிய 4ஆவது செயலி என்ற பெருமையை ஜிமெயில் பிடித்துள்ளது. முன்னதாக கூகுள் பிளே ஸ்டோர், யூடியூப், கூகுள் மேப்ஸ் போன்ற செயலிகளே ஆயிரம் கோடி பதிவிறக்கங்களை (Download) கடந்திருந்தது.
Surveyஆண்ட்ராய்டு தளத்தில் ஜிமெயில் செயலி ஆயிரம் கோடி டவுன்லோட்களை கடந்துள்ளது. டவுன்லோட்களில் இத்தகைய மைல்கல் எட்டிய நான்காவது செயலியாக ஜிமெயில் இருக்கிறது. முன்னதாக கூகுள் பிளே ஸ்டோர், யூடியூப் மற்றும் கூகுள் மேப்ஸ் போன்ற செயலிகள் ஆயிரம் கோடி டவுன்லோட்களை கடந்தது.
ஏப்ரல் 2004 வாக்கில் அறிமுகமான ஜிமெயில் செயலி இன்றும் உலகின் பிரபல மின்னஞ்சல் செயலிகளில் ஒன்றாக இருக்கிறது. ஜிமெயில் செயலியில் அவ்வப்போது பல்வேறு புது அம்சங்கள் அப்டேட் மூலம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அப்டேட் ஜிமெயில் செயலியில் அண்டூ அம்சம் வழங்கியது. இதை கொண்டு அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெற முடியும்.
அனுப்பிய மின்னஞ்சல்களை 5 நொடிகள், 10 நொடிகள், 20 நொடிகள் அல்லது 30 நொடிகளில் திரும்ப பெற முடியும். ஜிமெயிலில் அண்டூ அம்சம் ஜிமெயில் வெப் மற்றும் மொபைல் செயலியில் வழங்கப்படுகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
