Xiaomi Mijia 271L
Xiaomi அதன் லேட்டஸ்ட் Mijia 271L Three-Door Refrigerator சீனாவில் அறிமுகம் செய்தது, நிறுவனம் கூறியது என்னவென்றால் புதிய ரெப்ரஜிரேட்டர் மேலும் இது மாடர்ன் மற்றும் சிறிய கிச்சன் ஏற்றாவரு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சைஸ் வெறும் 56cm அகலம் மற்றும் 60cm டீப் ஆக இருக்கிறது அதாவது இது அதிகபட்சமாக 0.33 வர்க் மீட்டர் இருக்கிறது, மேலும் இதன் விலை மற்றும் அம்சங்களின் தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.
சீனாவில் 1,599 யுவான் (சுமார் ரூ. 19,000) அறிமுக விலையில் கிடைக்கிறது . இதன் வழக்கமான விலை 1,899 யுவான் (சுமார் ரூ. 22,500) ஆக வைக்கப்பட்டுள்ளது. இது “ஐஸ் ஃபெதர் ஒயிட்” நிறத்தில் வருகிறது, இது கைரேகை மற்றும் கீறல்-ரெசிச்டன்ட் அமைப்பைக் கொண்டுள்ளது.
டிசைன் மற்றும் அம்சங்களை பற்றிப் பேசுகையில், Mijia 271L மூன்று-டோர் பிரிட்ஜ் மிக சிறந்த காம்பேக்ட் டிசைன் உடன் ப்லேக்சிபில் ஸ்டோரேஜ் அதுவே ஹைஜின் மற்றும் மிக சிறந்த எனர்ஜி வழங்குகிறது மேலும் இது ஒரு ஸ்லிம் 56cm அகலம் , 60cm வரையிலான ஆழமாக இருக்கிறது, மேலும் இதை வைக்க 0.33 மீட்டர் இடத்திலே அழகாக வைக்க முடியும்.
நிறுவனத்தின் கூற்றுப்படி, Xiaomi Mijia தயாரிப்பின் அனைத்து பிரிவுகளிலும் சில்வர் -அயன் பாக்டீரியா ரெசிஸ்டண்ட் மற்றும் வாசனை நீக்க தொழில்நுட்பம் உள்ளது, இது 99.99% பாக்டீரியாக்களைக் கொல்லும் மற்றும் துர்நாற்றத்தையும் கட்டுப்படுத்துகிறது. இது 360° உறைபனி இல்லாத கூலிங் சைக்கிள் அமைப்பைக் கொண்டுள்ளது, இது பனி நீக்குதலின் தொந்தரவை நீக்குகிறது.
இதையும் படிங்க:சிப் சிப் வியர்வை விரட்ட AC யில் இந்த 5 முறையில் ரூமை ஆக்கலாம் செம்ம கூலாக
இது ஒரு இன்வெர்ட்டர் கம்ப்ரசர், இன்வெர்ட்டர் ஃபேன் மற்றும் குளிர்சாதன பெட்டியின் குளிரூட்டலைக் கண்காணித்து மேம்படுத்தும் 5 வெப்பநிலை சென்சார்களைக் கொண்டுள்ளது. இது வெறும் 36 டெசிபல் சத்தத்தில் இயங்குவதாகவும், தினமும் 0.59 kWh மின்சாரத்தைப் பயன்படுத்துவதாகவும் நிறுவனம் கூறுகிறது.
ஸ்மார்ட் அம்சங்களைப் பற்றி பேசுகையில், இது Xiaomi HyperOS மற்றும் Mijia ப்ரோசெசருடன் வருகிறது. பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன் அல்லது Xiao Ai வொயிஸ் அசிஸ்டன்ட் மூலம் இதைக் கட்டுப்படுத்தலாம். மேலும், முன்பக்கத்தில் ஒரு LED கட்டுப்பாட்டுப் பலகம் வழங்கப்படுகிறது, இதன் மூலம் வெப்பநிலையை மேனுவலாக அமைக்கலாம்.