மக்களே உஷார் WhatsApp யில் பரவுகிறது போலி RTO சலான் தப்பி தவறி க்ளிக் செய்தால் மொத்த பணமும் அபேஸ்

Updated on 04-Nov-2025

WhatsApp யில் உங்களுக்கு ட்ராபிக் சலான் சார்ந்த எதாவது ஒரு மெசேஜ் வந்தால் தப்பி தவறிகூட அதில் க்ளிக் செய்து விடாதிர்கள்,மேலும் அது உண்மையாக இருக்காது அதாவது அது போலியான மெசேஜாக இருக்கும், நீங்கள் அந்த லிங்கில் க்ளிக் செய்த உடனே உங்கள் போனில் உங்களுக்கு தெரியாமலே டவுன்லோட் ஆக தொடரும் இதன் மூலம் ஹேக்கர் உங்களுக்கே தெரியாமல் உங்களின் எந்க் தகவல் மட்டுமில்லாமல் உங்களின் போன் கண்ட்ரோல் அவர்களின் கையில் இருக்கும் அதாவது இதன் மூலம் உங்கள் தகவலை திருடுவது மட்டுமல்லாமல் உங்கள் அக்கபுண்டில் இருக்கும் பணத்தையும் கொள்ளையடிக்கலாம் சரி இதன் முழு தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.

WhatsApp யில் பரவி வரும் RTO மெசேஜ் என்ன ?

அறிக்கையின்படி போலிஷ் அதிகரி கூறுவது என்னவென்றால் RTO Traffic Challan.apk” என்ற பெயரில் ஒரு பைல் வாட்ஸ்அப்பில் மிகவும் வைரல் ஆக பரவி வருகிறது, மேலும் இது ஒரு மேல்வேர் ஆப் என்று கூறப்படுகிறது, மற்றும் இது மிகவும் ஆபத்தானது, அதாவது இந்த ஆப் உங்கள் போனின் அக்சஸ் பெற்று அந்த போனின் முழு கண்ட்ரோல் அவர்கள் கையில் சேரும் மேலும் கடந்த 10 நாளாக தொடர்ந்து பல புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது மேலும் இந்த RTO Traffic Challan. மெசேஜ் எப்படி இருக்கும் அதிலிருந்து எப்படி தப்பிப்பது.

WhatsApp யில் பரவி வரும் Traffic Challan. மெசேஜ் எப்படி இருக்கும்?

  • வாட்ஸ்அப்பில் இந்த முறையில் மோசடி செய்ய, மோசடி செய்பவர்கள் முதலில் தெரியாத நபர்களுக்கு செய்திகளை அனுப்புவார்கள். இதில் “RTO Traffic Challan.apk” என்ற பெயரில் APK பில் கொண்ட மெசேஜ் இருக்கும்
  • கஸ்டமர்கள் இதை சலான் மெசேஜ் காப்பி என்று டவுன்லோட் செய்து விடுகிறார்கள் அதன் பிறகு அதன் கூடவே புலியான ஆப இன்ஸ்டால் ஆகிவிடுகிறது.
  • கஸ்டமர் போனில் ஒரு ஆப்பாக மாறுவேடமிட்டு மேல்வேர் இன்ஸ்டால் செய்து , தொலைதூர தாக்குபவர்களுக்கு SMS, காண்டேக்த்கள், ஸ்டோரேஜ் மற்றும் பிற அனுமதிகளை வழங்குகிறது.
  • மோசடி செய்பவர்கள் பின்னர் பயனரின் போன் தொலைதூர அணுகலையும் கட்டுப்பாட்டையும் வழங்குகிறது , இதனால் போனில் உள்ள ஒவ்வொரு செயல்பாட்டையும் எளிதாகக் கண்காணிக்க முடியும்.
  • இதற்குப் பிறகு, அவர்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் வங்கி விவரங்கள், UPI சான்றுகள், OTP மற்றும் தனிப்பட்ட தகவல்களைத் திருடலாம்.

இதையும் படிங்க: WhatsApp வந்துவிட்டது புதிய அம்சம் இனி பாஸ்வர்ட் மறந்து போகும் டென்ஷன் இல்லை Passkey மட்டும் போதும் எப்படி உருவாக்குவது

இது போன்ற போலி மெசெஜிளிருந்து எப்படி தப்பிப்பது

  • WhatsApp, SMS மூலமாகவோ எந்த ஒரு தேவை இல்லாத மெசேஜ் வந்தாலோ அது போல APK பைலை எப்பொழுதும் டவுன்லோட் செய்யாதிர்கள்
  • நீங்கள் உண்மையாகவே உங்களின் சலான் தகவல் சரிபார்க்க வேண்டும் என்றால் அதன் அதிகாரபூர்வமான போர்ட்டல் Parivahan அல்லது நாட்டின் RTO வெப்சைட்டில் செக் செய்யலாம்
  • உங்கள் போனில் செட்டிங்க்ஸில் Unknown சோர்ஸ் உங்கள் போனில் தவறுதலாக கூட எந்த APK-யும் இன்ஸ்டால் செய்தவுடன் டிசெபில் செய்ய வேண்டும்.
  • Unknown சோர்ஸில் நீங்கள் டிசெபில் செய்தால், நீங்கள் APK பில் டவுன்லோட் அல்லது இன்ஸ்டால் செய்தால் வார்னிங் மெசேஜ் தெரியவரும்.
  • உங்கள் போனில் ஒப்பரேட்டிங் சிஸ்டமில் மற்றும் அனைத்து ஆப்களையும் எப்போதும் அப்டேட் நிலையில் வைத்திருங்கள்.
  • சந்தேகத்திற்கிடமான மெசேஜ்கள் அல்லது லிங்க்கள் ஏதேனும் இருந்தால் உடனடியாகப் புகாரளிக்கவும். நீங்கள் 1930 சைபர் கிரைம் உதவி எண்ணை அழைக்கலாம் அல்லது cybercrime.gov.in இல் புகாரளிக்கலாம்
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :