PM Modi AC Yojana 2025 யில் கிடைக்கிறது FREE கிடைக்கும் 1.5 கோடி AC? இது உண்மையா பாருங்க

Updated on 21-Apr-2025

PM Modi AC Yojana 2025 யில் பற்றி தற்பொழுது பிரதமர் மோடி யோஜனா என போஸ்ட் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது, இதில் அரசாங்கம் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது, இதன் கீழ் 1.5 கோடி 5 ஸ்டார் AC அரசாங்கத்தால் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மக்கள் இன்டர்நெட்டில் சர்ச் செய்ய ஆரம்பித்துள்ளார் இது உண்மையா பொய்யா என்பதை முழுசா தெரிஞ்சுக்கலாம் வாங்க.

PM Modi AC Yojana 2025 இது உண்மையா ?

இலவச 5 ஸ்டார் AC பெறும் திட்டம் குறித்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வரும் பதிவுகள் தவறாக வழிநடத்துகின்றன. அத்தகைய திட்டம் எதுவும் தொடங்கப்படவில்லை என்பதை PIB Fact Check அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தியுள்ளது. அரசாங்கம் 1.5 கோடி 5 ஸ்டார் ஏசிகளை மக்களுக்கு இலவசமாக கிடைக்காது. எனவே, இன்டர்நெட்டில் வைரலாகி வரும் இதுபோன்ற எந்தப் பதிவையும் கண்டு குழப்பமடைய வேண்டாம். PIB இன் சோசியல் மீடியா அக்கவுண்டில் உள்ள ஒரு பதிவின் மூலம் அத்தகைய திட்டம் எதுவும் தொடங்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

PIB Fact Check யின் பதிவில், ‘PM Modi AC Yojana 2025′ என்ற புதிய திட்டத்தின் கீழ், அரசாங்கம் 5 ஸ்டார் ACகளை இலவசமாக தேளிவரியாகும் என்றும், 1.5 கோடி 5 ஸ்டார் ACகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறும் ஒரு பதிவு சோசியல் மீடியாக்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது’ என்று கூறப்பட்டுள்ளது. #PIBFactCheck க்குப் பிறகு – இந்தக் கூற்று போலியானது என்று எழுதப்பட்டுள்ளது. @MinOfPower அத்தகைய திட்டத்தைத் ஒன்றும் வரவில்லை என கூறியது.

இந்தப் பதிவு வைரலான பிறகு, மக்கள் வேகமாக விண்ணப்பிக்கத் தொடங்கினர் என்பதை உங்களுக்குச் சொல்கிறோம். ஏனென்றால், அந்தப் பதிவில் அரசாங்கத்தால் 30 நாட்களுக்குள் ஏசிகள் நிறுவப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தப் பதிவு போலியானது என்று இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது, இது PIB-யே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:WhatsApp யின் மஜாவான அம்சம் எவ்ளோ பெரிய ஸ்டேட்டஸ் 1 நிமிடத்தில் பார்க்கலாம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :