ஆன்லைன் கேமிங்க்கு பெரிய ஆப்பு மக்களவையில் கூறிய 5 முக்கிய சுவாரசியம் என்ன

Updated on 21-Aug-2025

உண்மையான பணம் சம்பந்தப்பட்ட அனைத்து ஆன்லைன் கேம்களையும் தடை செய்யும் ஆன்லைன் கேமிங் ப்ரோமோஷன் மற்றும் ஒழுங்குமுறை ஆன்லைன் கேமிங் பில் 2025க்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போதய காலகட்டத்தில் பெரியவர் முதல் முதல் சிறிவர் வரை ஆன்லைன் கேமிங்க்கு அடிமை ஆகிவைத்துள்ளது மற்றும் பணமோசடி ஆகியவற்றைக் கையாள்வதை நோக்கமாகக் கொண்ட இந்த சட்டம், சட்டமாக மாறுவதற்கு முன்பு இப்போது மாநிலங்களவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

அரசின் படி இந்த ஆன்லைன் கேமிங்காள் பணம் மோசடி மற்றும் தற்கொலை தொடர்ந்து பல மடங்கு அதிகம் நடைபெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இதன் மூலம் இது போன்ற செயல் நடக்காது என கூறப்படுகிறது. ஆன்லைன் மனி கேமிங் தளங்கள் பெரும்பாலும் தவறான மோசடிக்கு பயன்படுத்துகிறது, இதன் மூலம் அங்கு அங்கு பண மோசடி பல மடங்கு அதிகரித்துள்ளது மற்றும் நாம் அன்றாட பல மோசடி மெசேஜ் போன்றவற்றை அனுப்ப படுகிறது இது தேசிய பாதுகாப்பு இது போன்ற செயல் முறை கண்டிக்க தக்கது.

ஆன்லைன் கேமிங் பில் பேமன்ட் பற்றி என்ன கூறப்பட்டது?

1.விளையாட்டுதலில் அங்கிகாரம்.

இந்த மசோதாவின் கீழ் இந்தியாவில் விளையாட்டை ஒரு முறையான விளையட்டாக அங்கீகரிக்க வேண்டும், மேலும் ஒவ்வொரு டோர்ணமேன்ட்க்கும் ஒரு விதி அமைக்க வேண்டும் என விளையாட்டு அமைச்சக தெரிவித்தது. விளையாட்டு அமைச்சகம் போட்டிகளுக்கான விதிகளை அமைக்கும், அகாடமிகள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் டெக்நோலாஜி பிளாட்பாரம் . ஊக்கத் திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு இயக்கங்கள் ஸ்போர்ட்களின் வளர்ச்சியை சப்போர்ட் செய்யும்.

2.கல்வி மற்றும் சோசியல் சார்ந்த கேமிங்கை ஊக்குவிக்க வேண்டும்.

ஆன்லைன் சோசியல் கேமிங்கை கண்டுபிடிக்கவும் மற்றும் அதை பதிவு செய்ய இந்த மசோதா அனுமதிக்கிறது, அதாவது இந்த அறிவை வளர்க்க, கலாச்சாரத்தை வளர்க்க மற்றும் இந்திய மதிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக இருக்க வேண்டும்.

3.Real-Money கேமிங்க்கு தடை.

எந்த ஒரு ஆன்லைன் கேமிங்கும் இந்த கேமை விளையாடினால் கேஷ் ரிவார்ட் கிடைக்கும் என பணம் செலுத்த கூறினால் அதற்க்கு தடை விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது, மேலும் இது போன்ற எந்த கேமிங்க்கும் விளம்பரம் செய்யப்படாது மற்றும் பேங்க்கில் இது போன்ற ட்ரேன்செக்ஷன் செய்வது தடை விதிக்கப்படும். IT Act, 2000 சட்டத்தின் கீழ் இது போன்ற செயல்முறைக்கு தடை விதிக்கப்படும்.

4.தேசிய விளையாட்டு ஆணையத்தை உருவாக்குதல்.

ஆன்லைன் கேமிங் இடத்தை ஒரு புதிய அமைப்பு மேற்பார்வையிடும். கேமிங்க்களை வகைப்படுத்துதல், புகார்களைக் கையாளுதல் மற்றும் ஒரு கேம் பண விளையாட்டு வகையின் கீழ் வருகிறதா என்பதை முடிவு செய்தல் ஆகியவை இதன் பங்குகளில் அடங்கும். இது வழிகாட்டுதல்கள் மற்றும் நடத்தை விதிகளையும் வெளியிடும்.

இதையும் படிங்க: சாதாரண பீச்சர் போனில் UPI மூலம் பணம் எப்படி அனுப்புவது, உங்க வயதான அப்பா அம்மாக்கு இதை சொல்லி கொடுங்க

5.கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்

விதிகளை மீறினால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படலாம். இதுபோன்ற விளையாட்டுகளை விளம்பரப்படுத்தினால் ரூ.50 லட்சம் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மீண்டும் மீண்டும் குற்றம் புரிபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.2 கோடி அபராதம் உட்பட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :