AI தவறான பயன்பாட்டிற்கு அரசின் அதிரடி நடவடிக்கை விரைவில் டீப்ஃபேக்குகள் மற்றும் மோசடிக்கு முற்றுபுள்ளி

HIGHLIGHTS

ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) தவறாக பயன்படுத்தப்படுவதால் அரசு கவலை தெரிவித்துள்ளது.

AI தவறை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய விதியை கொண்டு வர தயார் செய்துள்ளது

AI பல புதிய சவால்கள் உருவாகி வருகின்றன

AI தவறான பயன்பாட்டிற்கு அரசின் அதிரடி நடவடிக்கை விரைவில் டீப்ஃபேக்குகள் மற்றும் மோசடிக்கு முற்றுபுள்ளி

சோசியல் மீடியா மற்றும் சைபர் பகுதிதியில் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) தவறாக பயன்படுத்தப்படுவதால் அரசு கவலை தெரிவித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய விதியை கொண்டு வர தயார் செய்துள்ளது. ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) தவறான பயன்பாட்டைத் தடுக்க தற்போதைய சட்டங்கள் போதுமானதாக இல்லை என்றும், ஒரு புதிய சட்டம் அவசியம் என்றும் அரசாங்கம் கருதுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (IT) செயலாளர் எஸ். கிருஷ்ணனின் கூற்றுப்படி, தற்போதுள்ள சட்டங்கள் டீப்ஃபேக்குகள் மற்றும் லேபிளிங் போன்றவற்றைக் கையாளும் திறன் கொண்டவையாக இருந்தாலும், பல புதிய சவால்கள் உருவாகி வருகின்றன. இந்தத் துறையில் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது, மேலும் ஒரு புதிய சட்டம் பரிசீலனையில் உள்ளது. IT செயலாளரின் கூற்றுப்படி, தினசரி உருவாகும் புதிய சவால்களைச் சமாளிக்க தற்போதுள்ள சட்டம் திறனற்றதாக இருப்பதால், ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு புதிய சட்டத்தின் யோசனை எழுந்தது. தற்போது, ​​நிபுணர்களுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.

AI சிஸ்டத்தை கையாள ஒரு புதிய சட்டம் தேவை.

ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் நிபுணரான சந்தீப் புட்கியின் கூற்றுப்படி, ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) கையாள்வதற்குப் புதிய சட்டம் அவசியமாகிறது. இந்தச் சட்டத்தை தாமதப்படுத்துவது, இந்தியாவில் உள்ள மக்களுக்குப் பல்வேறு மட்டங்களில் சிக்கல்களை ஏற்படுத்தும். புட்கியின் கூற்றுப்படி, தற்போதைய சட்டக் கட்டமைப்பு போதுமானதாக இல்லை. ஏனெனில், பாரம்பரிய சட்டங்கள் ஆட்டோ மேஷினான (ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் ) மனதில் கொண்டு வடிவமைக்கப்படாமல், மனித நடத்தையை மனதில் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், பல முனைகளில் துல்லியமான சட்டம் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

AI நடக்கும் தவறுகளுக்கு யார் பொறுப்பு

ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் அமைப்புகளின் முடிவுகளுக்கான அடிப்படையை, அவற்றை உருவாக்குபவர்களுக்கே கூட முழுமையாகப் புரிந்துகொள்வது பெரும்பாலும் கடினமாக உள்ளது. இது “பிளாக் பாக்ஸ்” சிக்கல் என்று அழைக்கப்படுகிறது. ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் தீங்கு விளைவித்தால், அதற்கான பொறுப்பு உருவாக்குநரையா, பயனரையா அல்லது வேறு ஒருவரையா சாரும் என்பது குறித்து தற்போதைய சட்டங்கள் தெளிவற்றவையாக உள்ளன.

அதேபோல், ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் அடிப்படையிலான மருத்துவ ரோபோ ஒன்று தவறான அறுவை சிகிச்சையைச் செய்தாலோ அல்லது தானாக இயங்கும் வாகனம் விபத்தை ஏற்படுத்தினாலோ, இந்திய தண்டனைச் சட்டத்தால் ஒரு மெஷினை பொறுப்பாக்க முடியாது. இதுபோன்ற வழக்குகளுக்குத் தனி சட்ட விதிகள் தேவைப்படுகின்றன.

டீப்பேக் மற்றும் தவறான தகவல்

எந்த ஒரு நபரின் குரல் அல்லது முகம் அவரை போல கலோன் உருவாக்கி தவறாக பயன்படுத்துவது அதாவது டீப்ஃபேக் வீடியோவின் மூலம் அச்சு அசலாக அந்த நபரை போலவே AI வீடியோ உருவாக்குவதை மிக எளிதாக அமைகிறது.

தகவல் தொழில்நுட்பச் சட்டங்களும் அவதூறு ஒழுங்குமுறைகளும் இருந்தபோதிலும், டீப்ஃபேக் கன்டென்ட் மிக விரைவாகப் பரவுவதால், சட்ட நடவடிக்கை தொடங்கப்படுவதற்குள் சோசியல் மற்றும் அரசியல் ரீதியான பாதிப்புகள் ஏற்கனவே ஏற்பட்டுவிடுகின்றன.

இதையும் படிங்க :வெறும் ஊருக்கு போக வழி சொல்லும் Google Maps யில் இனி சாப்பாடு ஆர்டர் மற்றும் டெலிவரி

ப்ரைவசி மற்றும் பெரும் கண்காணிப்பு தேவை

முகத்தை அடையாளம் காணுதல் போன்ற தொழில்நுட்பங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இரண்டாலும் பெருமளவிலான கண்காணிப்பை மேற்கொள்ள வழிவகுத்துள்ளன. இந்தியாவின் டிஜிட்டல் தனிநபர் டேட்டா பாதுகாப்புச் சட்டம், 2023, தனிநபர் டேட்டாகளைப் பாதுகாத்தாலும், ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் டேட்டா பகுப்பாய்விலிருந்து பெறப்படும் விரிவான அம்சங்கள் அனுமானங்களையும் முழுமையாக ஒழுங்குபடுத்துவதில்லை. இதனால்தான், செயற்கை ஆர்டிபிசியல் ஒரு தனி மற்றும் விரிவான சட்டக் கட்டமைப்பின் தேவையை அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile